எடுத்தவுடன் இலவச சலுகை வழங்கி கேலக்ஸி எஸ்22 சீரிஸ் முன்பதிவை துவங்கிய சாம்சங்

By Kevin Kaarki  |  First Published Feb 10, 2022, 11:08 AM IST

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் மாடல்களின் இந்திய முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. 


சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்22 சீரிஸ் மாடல்களை நேற்று அறிமுகம் செய்தது. இந்த நிலையில், புதிய மாடல்களுக்கான முன்பதிவு இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. புதிய ஸ்மார்ட்போன்களுக்கான முன்பதிவு சாம்சங் இந்தியா ஸ்டோர் வலைதளத்தில் நடைபெற்று வருகிறது. ஸ்மாரட்போனிற்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1,999 ஆகும். முன்பதிவு செய்வோருக்கு ரூ. 2699  மதிப்புள்ள கேலக்ஸி ஸ்மார்ட் டேக் இலவசமாக வழங்கப்படுகிறது.

முன்பதிவு செய்வோர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அதனை ரத்து செய்து 100 சதவீதம் செலுத்திய தொகையை திரும்ப பெறலாம். கேலக்ஸி எஸ்22 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பவில்லை என்ற போதும் முன்பதிவுகள் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை நடைபெறும் என சாம்சங் அறிவித்து இருக்கிறது. இது கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலின் சர்வதேச வெளியீட்டு தேதிக்கு நெருக்கமாக இருக்கிறது.

Tap to resize

Latest Videos

undefined

அந்த வகையில் புதிய ஃபிளாக்‌ஷிப் மாடல்கள் இந்தியாவில் சர்வதேச வெளியீட்டின் போதே நடைபெறலாம். எனினும், கேலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி எஸ்22 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மார்ச் 11 ஆம் தேதி தான் வெளியாக இருக்கிறது. அமெரிக்காவில் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் விலை 1,199 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 89,725 என துவங்குகிறது. இந்தியாவிலும் இதன் விலை இந்த பட்ஜெட்டிலேயே நிர்ணயம் செய்யப்படலாம்.

இந்திய சந்தையில் புதிய கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அமேசான், ப்ளிப்கார்ட் மற்றும் இதர ஆன்லைன் மற்று்ம ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற இருக்கிறது.

click me!