Vivo T1 5G : ஷாக்கிங் விலையில் விவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 09, 2022, 03:36 PM ISTUpdated : Feb 09, 2022, 04:09 PM IST
Vivo T1 5G : ஷாக்கிங் விலையில் விவோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

சுருக்கம்

விவோ நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

விவோ  நிறுவனம் இந்தியாவில் T1 5ஜி ஸ்மார்ட்போனினை மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்தது. இதில் 6.58 இன்ச் ஃபுல் HD+LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 4GB விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5 லேயர் லிக்விட் கூலிங் தொழில்நுட்பம், 14451mm² அளவில் பெரிய கூலிங் சர்ஃபேஸ் கொண்டிருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 2MP மேக்ரோ கேமரா மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

விவோ T1 5ஜி அம்சங்கள்

- 6.58 இன்ச் 2408x1080 பிக்சல் FHD+ 120Hz LCD ஸ்கிரீன்
- ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 8nm பிராசஸர் 
- அட்ரினோ 619L GPU
- 4GB / 6GB / 8GB ரேம்
- 128GB மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12.0
- ஹைப்ரிட் டூயல் சிம்
- 50MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
- 2MP டெப்த் கேமரா
- 2MP மேக்ரோ கேமரா, f/2.4
- சூப்பர் நைட் மோட் (6GB/8GB ரேம் மாடல்களில் மட்டும்)
- 16MP செல்ஃபி கேமரா, f/2.0
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- 5G SA/NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.0, GPS/ GLONASS/ Beidou, NFC
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

விவோ T1 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்டார்லைட் பிளாக் மற்றும் ரெயின்போ ஃபேண்டசி நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB+128GB விலை ரூ. 15,990 என்றும் 6GB+128GB விலை ரூ. 16,990 என்றும் 8GB+128GB விலை ரூ. 19,990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட்,  விவோ இந்தியா ஆன்லைன் வலைதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் பிப்வரி 14 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.

அறிமுக சலுகைகள்:

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

அதிரடி விலையில் iPhone 16! வங்கி ஆஃபருடன் அள்ளிச் செல்லலாம்.. முழு விவரம் உள்ளே!
ஜியோ, ஏர்டெல்-க்கு இனி டஃப் பைட் தான்! சாட்டிலைட் இன்டர்நெட் கட்டணம் உயராது.. டிராய் எடுத்த அதிரடி முடிவு!