இந்திய சந்தையில் சியோமி நிறுவனம் 43 இன்ச் அளவில் புதிய 4K டி.வி. மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ சாதனங்களுடன் 43 இன்ச் ஸ்மார்ட் டி.வி.-யையும் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ரெட்மி ஸ்மார்ட் டி.வி. X43 மாடலில் 4K HDR 3840x2160 பிக்சல் டிஸ்ப்ளே, டால்பி விஷன், HDR 10+, 85 சதவீதத்திற்கும் அதிக NTSC கலர் ஸ்பேஸ், விவிட் பிக்சர் என்ஜின் மற்றும் வைடு கலர் கமுட் போன்ற வசதிகள் உள்ளன.
ஆடியோவை பொருத்தவரை ரெட்மி ஸ்மார்ட் டி.வி. X43 மாடலில் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் 30 வாட் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டால்பி ஆடியோ, DTS-HD, DRS விர்ச்சுவல் X, டால்பி அட்மோஸ் aARC போன்ற அம்சங்கள் உள்ளன. இவை தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகின்றன.
undefined
புதிய ரெட்மி ஸ்மார்ட் டி.வி. X43 மாடலில் ஆண்ட்ராய்டு டி.வி. 10, பில்ட்-இன் குரோம்காஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் ஆண்ட்ராய்டு டி.வி. 10 இண்டர்ஃபேஸ் உடன் பேட்ச்வால் வழங்கப்பட்டு இருக்கிறது. இது பயனர் விரும்பும் பிரத்யேக தரவுகளை பட்டியிலிடுகிறது. இந்த லான்ச்சரில் ஏராளமான பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் புதிய ரெட்மி ஸ்மார்ட் டி.வி. X43 மாடல் முதல் விற்பனையில் ரூ. 27,499 விலையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. முதல் விற்பனை பிப்ரவரி 16 ஆம் தேதி எம்.ஐ. வலைதளம், அமேசான் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் துவங்க இருக்கிறது.