Redmi Smart Band Pro : கொஞ்ச காலத்துக்கு கம்மி விலை - இந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ அறிமுகம்

By Kevin Kaarki  |  First Published Feb 9, 2022, 2:22 PM IST

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ மாடலை அறிமுகம் செய்தது.


ரெட்மி நோட் 11 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் ரெட்மி ஸ்மார்ட்  பேண்ட் ப்ரோ மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதே நிகழ்வில் ரெட்மி ஸ்மார்ட் டி.வி. X43 மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ மாடல் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. 

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி  ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ மாடலில் 1.47 இன்ச் ஃபுல் AMOLED டிஸ்ப்ளே, ஆல்வேஸ் ஆன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெல்லிய பெசல்கள் உள்ளது. இதன் TPU ஸ்டிராப் மேட் ஃபினிஷ் கொண்டிருக்கிறது. இதன் மொத்த எடை 15 கிராம் ஆகும். இதன் டிஸ்ப்ளே 450 நிட்ஸ் பிரைட்னஸ், 194x368 பிக்சல் ரெசல்யூஷன், 50-க்கும் அதிக பேண்ட் ஃபேஸ்கள் உள்ளன. 

Tap to resize

Latest Videos

சுமார்  110-க்கும் அதிக ஸ்போர்ட் மோட்களை கொண்டிருக்கும் ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ உடலில் எரிக்கப்பட்ட கலோரிகளின் கணக்கு, இதய துடிப்பு மாற்றங்கள், உடற்பயிற்சி செய்யும் நேரம் போன்ற விவரங்களை டிராக் செய்கிறது. இத்துடன் உடற்பயிற்சி மட்டுமின்றி யோகா மற்றும் இதர பயிற்சிகள் பற்றிய விவரங்களை டிராக் செய்கிறது. இத்துடன் 24 மணி நேர இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங், ஸ்லீப் குவாலிட்டி டிராக்கிங் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ மாடலில் 200mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 14 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது. பவர் சேவிங் மோட் பயன்படுத்தினால் பேட்டரி பேக்கப் 20 நாட்கள் வரை வரும். 5ATM தர சான்று பெற்று இருப்பதால் இது வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கிறது.

இந்தியாவில் புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ப்ரோ விலை குறுகிய காலக்கட்டத்திற்கு ரூ. 3499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை பிப்ரவரி 14 ஆம் தேதி எம்.ஐ. ஹோம், அமேசான் இந்தியா மற்றும் அதிகாரப்பூர்வ சில்லறை விற்பனை மையங்களில் நடைபெற இருக்கிறது. குறுகிய கால சலுகை என்பதால் விரைவில் இதன் விலை ரூ. 3,999 என மாறிவிடும். 

click me!