ட்ரூக் நிறுவனத்தின் புதிய ஏர் பட்ஸ் மற்றும் ஏர் பட்ஸ் பிளஸ் இயர்பட்ஸ் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
ட்ரூக் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய இயர்பட் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவை ஏர் பட்ஸ் மற்றும் ஏர் பட்ஸ் பிளஸ் என அழைக்கப்படுகின்றன. இரு இயர்பட்களிலும் 55ms லோ-லேடென்சி கேமிங் எக்ஸ்பீரியன்ஸ், ஆடியோ இன்-இயர் டிடெக்ஷன் சென்சார், ப்ளூடூத் 5.1 டிரான்ஸ்மிஷன், SBC கோடெக், 20 EQ மோட்கள், AI பவர்டு நாய்ஸ் கேன்சலேஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் 10mm டைனமிக் டிரைவர்கள், டூயல் மோட் கான்ஃபிகரேஷன் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு மியூசிக் மற்றும் கேமிங் இடையே ஸ்விட்ச் செய்ய முடியும். கேமிங் மோடில் இந்த இயர்பட் அல்ட்ரா லோ-லேடென்சி வழங்குகிறது. இது கேமிங் சத்தத்தை மிக நேர்த்தியாக கேட்க வழி செய்கிறது.
முதல் முறையாக ட்ரூக் இயர்பட்களில் பிரத்யேக கம்பேனியன் ஆப் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு இயர்பட்களை கண்டறிவதோடு, கேமிங் மோட் ஆன் செய்வது மற்றுநம் EQ அட்ஜஸ்ட்மெண்ட் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும். இந்த இயர்பட்களில் IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ட்ரூக் ஏர் பட்ஸ் மற்றும் ஏர் பட்ஸ் பிளஸ் மாடல்களை முழு சார்ஜ் செய்தால் 8 முதல் 10 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகிறது. சார்ஜிங் கேஸ் சேர்க்கும் பட்சத்தில் இந்த இயர்பட்கள் 48 மணி நேரத்திற்கான பிளேபேக் வழங்குகின்றன. இத்துடன் பேட்டரி அளவை அறிந்து கொள்ள சிறிய ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் ட்ரூக் ஏர் பட்ஸ் விலை ரூ. 1,599 என்றும் ஏர் பட்ஸ் பிளஸ் விலை ரூ. 1,699 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை என்பதால் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம். இரு மாடல்களும் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.