Tecno Pova 5G : பட்ஜெட் விலையில் 5ஜி போன் - கூடவே பவர் பேங்க் - சலுகையில் டஃப் கொடுத்த டெக்னோ

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 08, 2022, 02:39 PM ISTUpdated : Feb 08, 2022, 03:30 PM IST
Tecno Pova 5G : பட்ஜெட் விலையில் 5ஜி போன் - கூடவே பவர் பேங்க் - சலுகையில் டஃப் கொடுத்த டெக்னோ

சுருக்கம்

டெக்னோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்தியாவில் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.

டெக்னோ மொபைல்ஸ் நிறுவனம் இந்தியாவில் டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது இந்திய சந்தையில் டெக்னோ நிறுவனத்தின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இதில் 6.9 இன்ச் FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், 11 5ஜி பேட்ண்களை சப்போர்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் பேந்தர் கேம் என்ஜின் 2.0 கேமிங் செய்வதற்கு ஏற்ற திறன் வழங்குகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, AI லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000mAh பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

டெக்னோ போவா 5ஜி அம்சங்கள்

- 6.9 இன்ச் 2460x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 6nm பிராசஸர்
- மாலி-G68 MC4 GPU
- 8GB LPDDR5 ரேம்
- 128GB (UFS 3.1) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் HIOS 8.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- AI லென்ஸ், குவாட் எல்.இ.டி. ஃபிளாஷ்
- 16MP செல்ஃபி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக்
- 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
- யு.எஸ்.பி. டைப் சி
- 6000mAh பேட்டரி
- 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போன் ஏத்தர் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை அறிமுக சலுகையாக ரூ. 19,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை பிப்ரவரி 14 ஆம் தேதி துவங்குகிறது. இத்துடன் ரூ. 1999 மதிப்புள்ள பவர் பேங்க் ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

டிவி ரூ.5,999 முதல்.. வாஷிங் மெஷின் ரூ.4,590 முதல்.. தாம்சன் பம்பர் தள்ளுபடி அறிவிப்பு
யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?