BSNL new plan :150 நாள் வேலிடிட்டி தினமும் 2GB டேட்டா - ரூ. 197 விலை அதிரடி சலுகை அறிவித்த பி.எஸ்.என்.எல்.

By Kevin Kaarki  |  First Published Feb 8, 2022, 1:50 PM IST

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் பயனர்களுக்கு 150 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை அறிவித்து இருக்கிறது.


பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 197 விலையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தில் தினமும் 2GB அதிவேக டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், இலவச SMS உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி 150 நாட்கள் ஆகும். எனினும், தினசரி பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

புதிய ரூ. 197 விலை பி.எஸ்.என்.எல். பிரீபெயிட் திட்டம் கவர்ச்சிகரமாக தோன்றினாலும், இது பிளான் எக்ஸ்டென்ஷன் முறையில் அனைத்து வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பி.எஸ்.என்.எல். அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் முதல் 18 நாட்களுக்கு தினமும் 2GB அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. அதன்பின் மற்ற நாட்களுக்கு டேட்டா வேகம் 40Kbps ஆக குறைக்கப்பட்டு விடும்.

Tap to resize

Latest Videos

இத்துடன் வேலிடிட்டி நிறைவுறும் வரை இன்கமிங் அழைப்புகள் இலவசம் தான் என்ற போதும், அவுட்கோயிங் அழைப்புகளுக்கு பயனர்கள் தனியே ரிசார்ஜ் செய்ய வேண்டும்.  இத்துடன் வேலிடிட்டி நிறைவு பெறும் வரை இலவச SMS பலன் மட்டும் வழங்கப்படுகிறது. இத்தகைய பலன்களுடன் டெலிகாம் சந்தையில் கிடைக்கும் ஒரே திட்டமாக பி.எஸ்.என்.எல். ரூ. 197 இருக்கிறது. 

click me!