சாசம்சங் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M33 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாத துவக்கத்திலோ அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் உள்ள நொய்டா ஆலையில் உற்பத்தி செய்யப்படுதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. இதுதவிர சாம்சங் நிறுவனம் கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை புதிய சாம்சங் கேலக்ஸி M33 5ஜி மாடலில் எக்சைனோஸ் 1200 பிராசஸர், 6GB ரேம், 128GB மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்., 6000mAh பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. பெரும்பாலான சாம்சங் ஸ்மார்ட்போன்களை போன்ற இந்த மாடலிலும் AMOLED பேனல் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் கேமரா சென்சார்கள் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், இதில் 64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 5MP சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
முந்தைய கீக்பென்ச் தகல்களின் படி சாம்சங் கேலக்ஸி M33 5ஜி மாடல் சிங்கில் கோர் சோதனையில் 726 புள்ளிகளையும், மல்டி கோர் சோதனையில் 1830 புள்ளிகளையும் பெற்று இருந்தது. இந்த ஸ்மார்ட்போனின் டெஸ்டிங் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருவதால் விரைவில் இதன் வெளியீட்டு விவரங்கள் அறிவிக்கப்படலாம்.