ரியல்மி நிறுவனம் விரைவில் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ரியல்மி நிறுவனத்தின் முதல் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான GT 2 ப்ரோ மாடல் கடந்த மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த மாடலின் இந்திய வெளியீட்டை ரியல்மி உறுதிப்படுத்தி இருக்கிறது. புதிய ரியல்மி GT 2 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்தியா வெளியீட்டை ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இந்திய வெளியீடு மட்டும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், வரும் நாட்களில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. முந்தைய கேள்வி பதில் நிகழ்வு ஒன்றில் ரியல்மி GT 2 சீரிஸ் தவிர புதிய நார்சோ பிராண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மாதவ் சேத் பதில் அளித்து இருந்தார்.
undefined
அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT 2 ப்ரோ மாடலில் 6.7 இன்ச் LPTO AMOLED ஸ்கிரீன், ஃபிளெக்சிபில் பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12GB ரேம், 512GB மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டைமண்ட் ஐஸ் கோர் கூலிங் சிஸ்டம் பிளஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இது ஸ்மார்ட்போனின் வெப்ப அளவை 205 சதவீதம் வரை குறைக்கும்.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 3MP மேக்ரோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். சார்ந்த ரியல்மி யு.ஐ. கொண்டிருக்கிறது. மேலும் இது 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை 33 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும்.