இந்தியாவில் ஓப்போ ரெனோ 7 5G ப்ரீ-ஆர்டர் துவக்கம் - கூடவே ஆஃபர்களும் அறிவிப்பு

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 11, 2022, 12:14 PM IST
இந்தியாவில் ஓப்போ ரெனோ 7 5G ப்ரீ-ஆர்டர் துவக்கம் - கூடவே ஆஃபர்களும் அறிவிப்பு

சுருக்கம்

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களின் முன்பதிவை துவங்கி இருக்கிறது.   

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவை துவங்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் ஒப்போ இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது. ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போன் ரெனோ 7 ப்ரோ 5ஜி மாடலுடன் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர், 8GB ரேம், 256GB மெமரி, 64MP பிரைமரி கேமரா, 8MP அலல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்திய சந்தையில் ஒப்போ ரெனோ 7 5ஜி மாடல் விலை ரூ. 28,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு துவங்கி உள்ள நிலையில் விற்பனை பிப்ரவரி 17 ஆம் தேதி துவங்க இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டார்லைட் பிளாக் மற்றும் ஸ்டார்டிரையல்ஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

ஒப்போ மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஒப்போ என்கோ M32 இயர்போன் ரூ. 1399 எனும் சிறப்பு விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் உண்மை விலை ரூ. 1799 ஆகும். இத்துடன் ரெனோ 7 5ஜி மாடலுக்கு ப்ளிப்கார்ட் தளத்தில் வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும்  போது ரூ. 3 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.

ஒப்போ  ரெனோ 7 5ஜி அம்சங்கள்

- 6.4  இன்ச் FHD+AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
- மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்
- 8GB ரேம், 256GB மெமரி
- 64MP பிரைமரி கேமரா
- 8MP அல்ட்ரா வைடு கேமரா
- 2MP மேக்ரோ கேமரா
- 32MP செல்ஃபி கேமரா
- ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர் ஓ.எஸ். 12
- 4500mAh பேட்டரி
- 65 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் 

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

click me!

Recommended Stories

ஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா? பணத்தை ஆட்டைய போடுபவர்களுக்கு 'செக்'.. கூகுளின் மாஸ் திட்டம்!
எலான் மஸ்க் வைத்த 'செக்'.. கூகுள், ChatGPT எல்லாம் காலி? பங்குச்சந்தையை கலக்கும் Grok 4.20!