4 ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட் தருவோம் - மாஸ் அறிவிப்பை வெளியிட்ட சாம்சங்

By Kevin Kaarki  |  First Published Feb 10, 2022, 4:06 PM IST

சாம்சங் நிறுவனம் தனது சாதனங்களுக்கு 4 ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட் வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. 


சாம்சங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு மென்பொருள் அப்டேட் வழங்குவம் விவகராத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நான்கு தலைமுறை ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்குவதாக சாம்சங் அறிவித்து இருக்கிறது. 

இதுபற்றிய அறிவிப்பை சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் வெளியிட்டது. கேலக்ஸி எஸ்22 சீரிஸ் மட்டுமின்றி அந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாதனங்களுக்கும் புதிய ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட் வழங்கப்படும் என சாம்சங் உறுதியளித்து இருக்கிறது. அதன்படி பயனர்களுக்கு தொடர்ந்து புது அம்சங்கள் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என தெரிகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

கடந்த சில மாதங்களாக அறிமுகம் செய்யப்படும் புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு இரண்டு ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன.  இத்துடன் சில ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு நீண்ட கால அப்டேட் வழங்குவதன் மூலம் அவற்றின் ஆயுட்காலம் அதிகரிக்கும். அதன்படி பயனர்கள் நீண்ட காலம் குறிப்பிட்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம்.

தற்போது சாம்சங் நிறுவனத்தின் 12 சாதனங்களுக்கு நான்கு ஆண்டுகள் ஆண்ட்ராய்டு ஓ.எஸ். அப்டேட் வழங்கப்படுகிறது. இதில் கேலக்ஸி எஸ்22 சீரிஸ், கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ், கேலக்ஸி எஸ்21 மாடல்கள், கேலக்ஸி எஸ்21 FE, கேலக்ஸி இசட் ஃபோல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 3 போன்ற மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

கூகுள் நிறுவனமே தனது பிக்சல் 6 சீரிஸ் மாடல்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்குவதாக அறிவித்து இருக்கும் நிலையில், சாம்சங்கின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனினும், பிக்சல் 6 சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் மாடல்களுக்கு கூகுள் ஐந்து ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக உறுதியளித்து இருக்கிறது. 

click me!