குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் வெளியிடும் சாம்சங் - இணையத்தில் வெளியான சூப்பர் தகவல்

By Kevin Kaarki  |  First Published Mar 12, 2022, 11:39 AM IST

சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி A13 5ஜி ஸ்மார்ட்போன் உற்பத்தி இந்தியாவில் துவங்கியது.


சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தனது கேலக்ஸி A13 4ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதே ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய கேலக்ஸி A13 5ஜி மாடலின் உற்பத்தி இந்தியாவில் துவங்கி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய கேலக்ஸி A13 5ஜி ஸ்மார்ட்போன் உற்பத்தி கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஆலையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இதே ஸ்மார்ட்போனின் வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த வரிசையில், தற்போது இதன் உற்பத்தி பற்றிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பல முறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.  

Latest Videos

undefined


 
அதன்படி சாம்சங் கேலக்ஸி A13 5ஜி மாடலில் 6.5 இன்ச் LCD பேனல், 1600x720 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என தெரிகிறது. டியூடிராப் நாட்ச் கொண்டிருக்கும் கேலக்ஸி A13 5ஜி மாடலில் 5MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமராவுடனஅ, 2MP மேக்ரோ மற்றும் 2MP டெப்த் சென்சார் வழங்கப்படும் என தெரிகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் அமெரிக்க வெர்ஷனில் மீடியாடெக் டிமென்சிட்டி 700 பிராசஸர், 4GB ரேம், 64GB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, NFC உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக், பக்கவாட்டில் கைரேகை சென்சார், சிங்கில் ஸ்பீக்கர் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இத்துடன் ஆண்ட்ராய்டு 11, 5000mAh பேட்டரி மற்றும் 15 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. அமெரிக்காவில் சாம்சங் கேலக்ஸி A13 5ஜி மாடல் விலை 249 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 18,700 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. எனினும், இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

click me!