அசத்தல் அம்சங்களுடன் புது ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் - விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

By Kevin Kaarki  |  First Published Mar 12, 2022, 9:37 AM IST

ட்ரூக் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


ஆடியோ சாதனங்களுக்கு பெயர்பெற்ற பிராண்டான ட்ரூக் இந்திய சந்தையில் ட்ரூக் ஹாரிசான் W20 ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் GPS, IP68 சான்று, பல்வேறு ஸ்போர்ட்ஸ் மோட்கள், அலுமினியம் அலாய் கேசிங் மற்றும் 300mAh பேட்டரி என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது. 

இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ஏழு நாட்களுக்கான பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் 45 நாட்களுக்கு ஸ்டாண்ட்பை வழங்குகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

ட்ரூக் ஹாரிசான் W20 அம்சங்கள்:

- 1.69 இன்ச் 240x280 பிக்சல் ஃபுல் ஸ்கிரீன் டச் கலர் IPS டிஸ்ப்ளே
- 100-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்
- ப்ளூடூத் 5
- 24x7 இதய துடிப்பு சென்சார், இரத்த அழுத்த மாணிட்டர், SpO2, பீடோமீட்டர் மற்றும் ஸ்லீப் மாணிட்டர்
- 9-ஆக்சிஸ் கிராவிட்டி சென்சார்
- ஸ்போர்ட்ஸ் மோட்கள் 
- ஸ்மார்ட் நோட்டிஃபிகேஷன்
- DND மோட், செடண்டரி ரிமைண்டர், வானிலை விவரங்கள், மியூசிக் கண்ட்ரோல்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
- 300mAh பேட்டரி 

புதிய ட்ரூக் ஹாரிசான் W20 ஸ்மார்ட்வாட்ச் பிளாக், ரெட் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. அறிமுக சலுகையாக இதன் விலை ரூ. 2,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

click me!