மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மாடல்களில் எனர்ஜி சேவர் மோட் அறிமுகம் செய்து இருக்கிறது.
எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மாடல்களில் உள்ள எனர்ஜி சேவர் மோட் இனி சிஸ்டம் மற்றும் கேம் அப்டேட்களை டவுன்லோட் செய்யும் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த அம்சம் ஸ்டாண்ட்பை மோடில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
இதுபற்றிய தகவலை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எக்ஸ்பாக்ஸ் வயர் வலைதள பதிவில் தெரிவித்தது. 2030 ஆண்டு வாக்கில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கார்பன் நெகடிவ், வாட்டர் பாசிடிவ் மற்றும் ஜீரோ வேஸ்ட் நிலையை அடைய இலக்கு நிர்ணயித்து உள்ளது. மேலும் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ் மற்றும் அதன் பாகங்களை உற்பத்தி செய்ய மறுபயன்பாட்டு முறையை கையாள துவங்கி இருப்பதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் கண்ட்ரோலர்களான எலெக்ட்ரிக் வோல்ட் மற்றும் டேஸ்டிரைக் கமோ ஸ்பெஷல் எடிஷன் ஆட்டோமோடிவ் ஹெட்லைட் கவர்கள், பிளாஸ்டிக் ஜக், சிடி உள்ளிட்டவைகளின் மறுசுழற்சி செய்யப்பட்ட மூல பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் 15 நிறங்களில் இதேபோன்ற மறுசுழற்சி முறையை மைக்ரோசாஃப்ட் பயன்படுத்தி வருகிறது.
தற்போதைய எனர்ஜி சேவர் மோட் பயனரின் மின்சக்தி கட்டணம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஸ்டாண்ட்பை மோடை விட எனர்ஜி சேவர் மோட் 20 சதவீதம் குறைந்த மின்திறனை பயன்படுத்தும். பயனர்கள் முதல் முறை கன்சோலை செட்டப் செய்யும் போது இந்த அம்சம் தானாக செயல்படுத்தப்பட்டு விடும். இந்த அப்டேட்டை தொடர்ந்து கரண்ட் பில் பற்றி கவலை கொள்வோர் இனி ஸ்டாண்ட்பை மோடை பயன்படுத்த மாட்டார்கள்.
இந்த மோடில் இருக்கும் போது எக்ஸ்பாக்ஸ் சிஸ்டம் சாஃப்ட்வேர் தானாக அப்டேட் ஆகும் என்பதால் ஸ்டாண்ட்பை மோட் பயனற்று போகிறது. எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எக்ஸ் மற்றும் சீரிஸ் எஸ் மாடல்களில் உள்ள அதிவேக SSD-க்கள் காரணமாக எனர்ஜி சேவர் மோடில் இருந்து அதிவேகமாக சிஸ்டம் பூட் ஆகிறது. இத்துடன் குயிக் ரி-சியூம் அம்சம் பல்வேறு கேம்களை செயலற்று போக செய்கிறது. மேலும் இது எனர்ஜி சேவர் மோடிலும் இயங்குகிறது.
உங்கள் கன்சோலை புதிய எனர்ஜி சேவர் மோடில் வைக்க செட்டிங்ஸ் -- ஸ்லீப் மோட் மற்றும் ஸ்டார்ட்அப் -- ஸ்லீப் மோட் -- எனர்ஜி சேவர் போன்ற ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.