இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சியோமி, ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.
முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான சியோமி இந்திய போன் உற்பத்தியாளர்களுடன் இணைந்து உள்நாட்டில் போன் உற்பத்தி செய்து அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளன. இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு கிடைக்கும் சலுகைகளை கருத்தில் கொண்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சியோமி, ஒப்போ மற்றும் விவோ என மூன்று ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இந்தியாவில் பிரபல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களாக அறியப்படும் இரண்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சியோமி நிறுவனம் டிக்சன் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடனமும், ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்கள் லாவா நிறுவனத்துடனமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இந்த திட்டம் நிறைவேறும் பட்சத்தில் சியோமி, ஒப்போ மற்றும் விவோ நிறுவன ஸ்மார்ட்போன்கள் ‘Assembled in India‘ டேக் உடன் விற்பனைக்கு வரும். இத்துடன் இந்த நிறுவனங்கள் லாவா மற்றும் டிக்சன் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளில் பயன்பெற முடியும். இந்த சலுகைகளை அடுத்து ஸ்மார்ட்போன்களின் விலையும் குறையும் என எதிர்பார்க்கலாம்.
தற்போதைய பேச்சுவார்த்தைகள் செயல்பாட்டும் வரும் பட்சத்தில் ஸ்மார்ட்போன்களின் உற்பத்தி இந்த ஆண்டிலேயே துவங்கும் என தெரிகிறது. தற்போதைகத்கு சியோமி, ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் இந்திய ஆலைகளை விரைவில் பார்வையிடலாம் என்றும் கூறப்படுகிறது.