Renault discount offer : கார்களுக்கு ரூ. 1.30 லட்சம் வரை சலுகைகள்- மாஸ் காட்டும் ரெனால்ட்

By Kevin Kaarki  |  First Published Mar 11, 2022, 3:27 PM IST

ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி வழங்குவதாக அறிவித்து இருக்கிறது.


ரெனால்ட் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வரும் அனைத்து கார் மாடல்களுக்கும் அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவைகளை அறிவித்து இருக்கிறது. இவை இந்த மாதம் இறுதி தேதி வரை வழங்கப்படுகிறது. ரெனால்ட் கார்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகளின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ரெனால்ட் கைகர்

Tap to resize

Latest Videos

ரெனால்ட் கைகர் மாடலுக்கஉ ரூ. 55 ஆயிரம் மதிப்பிலான லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் ஊரக பலன் வழங்கப்படுகிறது. 

ரெனால்ட் டிரைபர்

ரெனால்ட் டிரைபர்  2021 மற்றும் 2022 மாடல்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் சலுகை, ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் டிரைபர் அனைத்து வேரியண்ட்களுக்கும் ரூ. 5 ஆயிரம் உரக பலன்கள் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் டிரைபர் மாடல் இந்திய சந்தை விற்பனையில் ஒரு லட்சம் யூனிட்கள் எனும் மைல்கல்லை எட்டியது. இதனை கொண்டாடும் வரையில் டிரைபர் லிமிடெட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலுக்கு ரூ. 44 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது.

ரெனால்ட் குவிட்

குவிட் ஹேட்ச்பேக் மாடல் இந்தியாவில் 2021 மற்றும் 2022 வேரியண்ட்களில் கிடைக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வேரியண்ட்களுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் போனஸ், ரூ. 5 ஆயிரம் ஊரக தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. 

ரெனால்ட் டஸ்டர்

ரெனாஸ்ட் டஸ்டர் மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 1.30 லட்சம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ. 50 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 50 ஆயிரம் தள்ளுபடி மற்றும் ரூ. 30 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள் உள்ளிட்டவை அடங்கும். 

click me!