ஹோண்டா நிறுவனம் தனது CB350 ட்வின் மாடல்களை புதிய நிறங்களில் அறிமுகம் செய்கிறது.
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் ஹைனெஸ் CB350 மற்றும் CB350RS மோட்டார்சைக்கிள் மாடல்களை சத்தமின்றி அப்டேட் செய்து இருக்கிறது. இரு மாடல்களும் புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதுபற்றி ஹோண்டா சார்பில் இதுவரை எந்த தகவலும் அளிக்கப்பட்வில்லை. எனினும், புதிய நிறம் கொண்ட ஹோண்டா CB350 ட்வின் மாடல்கள் விற்பனையகம் வரத்துவங்கி இருக்கின்றன.
2022 ஹோண்டா ஹைனெஸ் CB350 மாடல் புதிதாக மேட் கிரே நிறத்தில் கிடைக்கிறது. இது DLX வேரியண்டில் கிடைக்கும் என தெரிகிறது. முன்னதாக இந்த மாடல் பிரெஷியஸ் ரெட் மெட்டாலிக், மேட் மார்ஷல் கிரீன் மெட்டாலிக் மற்றும் பியல் நைட்ஸ்டார் பிளாக் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. CB350RS மாடலில் புதிதாக மெட்டாலிக் புளூ பெயிண்ட் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர ஹோண்டா CB350RS மாடல் பிளாக் மற்றும் பியல் ஸ்போர்ட்ஸ் எல்லோ மற்றும் ரேடியண்ட் ரெட் மெட்டாலிக் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது. புதிய நிறம் தவிர ஹோண்டா CB350 ட்வின் மாடல்களின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் ஹோண்டா CB350 ட்வின் மாடல்களில் 348சிசி சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இது 21 பி.எஸ். பவர், 30 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இந்திய சந்தையில் ஹோண்டா ஹைனெஸ் CB350 DLX வேரியண்ட் விலை ரூ. 1.96 லட்சம் என்றும் CB350RS வேரியண்ட் விலை ரூ. 2.01 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஹோண்டா நிறுவனம் ஹைனெஸ் மாடலின் ஆனிவர்சரி எடிஷனை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 2.03 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.