ஸ்டைலிஷ் லுக், சூப்பர் அம்சங்களுடன் ஃபோக்ஸ்வேகன் ID. Buzz அறிமுகம்

By Kevin Kaarki  |  First Published Mar 11, 2022, 12:56 PM IST

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஆல்-எலெக்ட்ரிக் ID. Buzz மாடலின் ப்ரோடக்‌ஷன் வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது.


ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எலெக்ட்ரிக் மைக்ரோபஸ் அல்லது எம்.பி.வி. மாடலான ID. Buzz ப்ரோடக்‌ஷன் வேரியண்டை அறிமுகம் செய்தது. இந்த மாடலின் விற்பனை ஐரோப்பாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்க இருக்கிறது. புதிய ID. Buzz மாடல் பயணிகள் பிரிவு மற்றும் கார்கோ என இரண்டு வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

மற்ற ஃபோக்ஸ்வேகன் ID. மாடல்களை போன்றே ID. Buzz மாடலும் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் மாட்யுலர் எலெக்ட்ரிக் டிரைவ் கிட் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது ஐரோப்பாவின் முதல் ஆல் எலெக்ட்ரிக் பஸ் ஆகும். "1950-க்களில் ஃபோக்ஸ்வேகன் புல்லி மாடல் புதுவித ஆட்டோமோடிவ் சுதந்திரம், தனித்துவம் மற்றும் சிறந்த எமோஷனாக விளங்கியது. ID. Buzz இந்த முறையை கையில் எடுத்து இந்த காலத்திற்கு ஏற்றவாரு மாற்றிக் கொண்டிருக்கிறது."

Tap to resize

Latest Videos

"சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமலும், நம்பத்தகுந்த வகையிலும், முழுமையாக நெட்வொர்க் செய்யப்பட்டு அடுத்த அத்தியாயத்திற்கு தயார் நிலையில் இருக்கிறது. இந்த கார் மூலம் நாங்கள், எங்களின் மிகமுக்கிய தீம்களில் ஒன்றான ACCELERATE யுத்தியை எங்களது வாகனத்தில் முதல் முறையாக வழங்கி இருக்கிறோம்," என ஃபோக்ஸ்வேகன் பயணிகள் கார் பிரிவு நிர்வாக குழு தலைவர் ரால்ஃப் பிராண்ட்ஸ்டேடர் தெரிவித்தார். 

புதிய ஃபோக்ஸ்வேகன் ID. Buzz இரு வெர்ஷன்களிலும் 77 கிலோவாட் ஹவர் பேட்டரி மற்றும் 150 கிலோவாட் திறன் கொண்ட மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் வழங்கப்படும் லித்தியம் அயன் பேட்டரியை வால் பாக்ஸ் மற்றும் பொது சார்ஜிங் மையங்களில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இதனை சார்ஜ் செய்ய 11 கிலவோவாட் AC வால் சார்ஜர் பயன்படுத்த வேண்டும். இதுதவிர 170 கிலோவாட் வரையிலான திறன் கொண்ட DC ஃபாஸ்ட் சார்ஜி்ங் நெட்வொர்க்கையும் இந்த கார் சப்போர்ட் செய்கிறது.

 இதில் உள்ள பேட்டரியை 5 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே ஆகும். இந்த கார் முழு சார்ஜ் செய்தால் எத்தனை கிலோமீட்டர்கள் செல்லும் என்ற விவரத்தை ஃபோக்ஸ்வேகன் இதுவரை அறிவிக்கவில்லை. இந்த மாடல் 1050-க்களில் அதிக பிரபலமாக விளங்கிய ஃபோக்ஸ்வேகன் பஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

click me!