ஸ்மார்ட் டி.வி.க்களுக்கு விலை குறைப்பு, கடையில் வாங்கினா கூடுதல் தள்ளுபடி - ரியல்மி அதிரடி

By Kevin Kaarki  |  First Published Mar 11, 2022, 10:24 AM IST

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தனது ஸ்மார்ட் டி.வி. மாடல்களுக்கு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது.


ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வரும் டி.வி.-க்களில் தேர்வு செய்யப்பட்ட மாடல்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இத்துடன் ஆஃப்லைன் சந்தையில் வாங்குவோருக்கு ‘Special Sellout Scheme’ பெயரில் கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது.

ரியல்மி ஸ்மார்ட் டி.வி. 32 இன்ச் நியோ, ரிய்லமி ஸ்மார்ட் டி.வி. HD 32 இன்ச், ரியல்மி ஸ்மார்ட் டி.வி. FHD 32 இன்ச் மற்றும் ரியல்மி ஸ்மார்ட் டி.வி. 4K 43 இன்ச் உள்ளிட்ட மாடல்களின் விலை ரூ. 1000 குறைக்கப்பட்டு இருக்கிறது. விலை குறைப்பு ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்கள் என எங்கு வாங்கினாலும் பொருந்தும். இந்த சலுகைகள் இன்றுடன் (மார்ச் 11) நிறைவு பெறுகிறது.

Tap to resize

Latest Videos

ஆஃப்லைன் சேனல்களில் ரியல்மி ஸ்மார்ட் டி.வி.க்களை வாங்குவோருக்கு கூடுதலாக ரூ. 1500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்மார்ட் டி.வி. வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஓர் சிறப்பு சலுகையை ரியல்மி அறிவித்து இருக்கிறது. அதன்படி வாடிக்கையாளர் வாங்கும் டி.வி. 48 மணி நேரத்தில் இன்ஸ்டால் செய்யப்படவில்லை எனில், ரியல்மி சார்பில் இலவசமாக ரியல்மி பாக்கெட் ப்ளூடூத் ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது.

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் புதிய விலை விவரங்கள்:

ரியல்மி ஸ்மார்ட் டி.வி. 32 இன்ச் நியோ ரூ. 13,999
ரியல்மி ஸ்மார்ட் டி.வி. HD 32 இன்ச் ரூ. 15,999
ரியல்மி ஸ்மார்ட் டி.வி. FHD 32 இன்ச் ரூ. 17,999
ரியல்மி ஸ்மார்ட் டி.வி. 4K 43 இன்ச் ரூ. 29,999

ரியல்மியின் ‘Special Sellout Scheme’ சலுகை விவரங்கள்

ரியல்மி ஸ்மார்ட் டி.வி. 32 இன்ச் நியோ ரூ. 13,999 விலையில் ரூ. 1,500 தள்ளுபடி
ரியல்மி ஸ்மார்ட் டி.வி. HD 32 இன்ச் ரூ. 15,999 விலையில் ரூ. 1000 தள்ளுபடி
ரியல்மி ஸ்மார்ட் டி.வி. FHD 32 இன்ச் ரூ. 17,999 விலையில் ரூ. 1000 தள்ளுபடி
ரியல்மி ஸ்மார்ட் டி.வி. 4K 43 இன்ச் ரூ. 29,999 விலையில் ரூ. 1000 தள்ளுபடி
ரியல்மி 100 வாட் சவுண்ட்பார் ரூ. 7999 விலையில் ரூ. 500 தள்ளுபடி 

click me!