ரூ. 11,999 விலையில் புது ஸ்மார்ட் டி.வி. அறிமுகம் - அதிரடி ஆஃபர் அறிவிப்பு!

By Kevin Kaarki  |  First Published Mar 10, 2022, 5:00 PM IST

இன்ஃபினிக்ஸ் நிறுவனத்தின் புதிய X3 ஸ்மார்ட் டி.வி. மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


இன்ஃபினிக்ஸ் X3 ஸ்மார்ட் டி.வி. இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட் டி.வி. மாடல் 32 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இரு மாடல்களிலும் 400 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் HDR10 தரவுகளுக்கான சப்போர்ட் உள்ளது. இன்ஃபினிக்ஸ் X3 ஸ்மார்ட் டி.வி.ய மாடலில் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

இந்த டி.வி. ஆண்ட்ராய்டு டி.வி. 11 ஓ.எஸ். சார்ந்த இன்ஃபினிக்ஸ் ஆண்டி புளூ ரே ப்ரோடெக்‌ஷன் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய இன்ஃபினிக்ஸ் X3 ஸ்மார்ட் டி.வி.யுடன் வழங்கப்படும் ரிமோட்டில் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, யூடியூபோ போன்ற சேவைகளுக்கான பிரத்யேக பட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் சப்போர்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு உள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இன்ஃபினிக்ஸ் X3 ஸ்மார்ட் டி.வி. அம்சங்கள்

- 32 இன்ச் மாடலில் HD ரெடி 1336x768 பிக்சல் டிஸ்ப்ளே 
- 43 இன்ச் மாடலில் FHD+ 1920x1080 பிக்சல் டிஸ்ப்ளே
- ஆண்டி புளூ ரே தொழில்நுட்பம்
- 400 நிட்ஸ் பிரைட்னஸ்
- HDR10 வசதி
- குவாட் கோர் ரியல்டெக் RTD2841 பிராசஸர்
- 1GB ரேம்
- 8GB மெமரி
- ஸ்டீரியோ ஸ்பீக்கர் செட்டப்
- 32 இன்ச் மாடலில் 20 வாட் அவுட்புட்
- 43 இன்ச் மாடலில் இரண்டு பாக்ஸ் ஸ்பீக்கர்கள், 36 வாட் அவுட்புட்
- 3 HDMI போர்ட்கள், 2 USB போர்ட்கள், ஈத்தர்நெட் போர்ட்
- 3.5mm ஹெட்போன் ஜாக்
- ஆணட்ராய்டு டி.வி. 11 ஓ.எஸ்.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

இன்ஃபினிக்ஸ் X3 ஸ்மார்ட் டி.வி. மாடலின் 32 இன்ச் மாடல் விலை ரூ. 11,999 என்றும் 43 இன்ச் மாடல் விலை ரூ. 19,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு ஸ்மார்ட் டி.வி. மாடல்களின் முன்பதிவும் மார்ச் 12 முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது. 

புதிய இன்ஃபினிக்ஸ் X3 ஸ்மார்ட் டி.வி. மாடல்களை முன்பதிவு செய்வோர் இன்ஃபினிக்ஸ் ஸ்னோகோர் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை ஒரு ரூபாய்க்கு வாங்கிட முடியும். இதன் உண்மை விலை ரூ. 1,499 ஆகும். எனினும், இந்த இயர்போன் தற்போது ரூ. 1,017 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

click me!