டுகாட்டி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்கிராம்ப்ளர் 1100 டிரிபியூட் ப்ரோ மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது.
டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 டிரிபியூட் ப்ரோ மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 12.89 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிரத்யேக கலிலியோ ஆக்ரா லிவெரி மற்றும் பிளாக் நிற ஃபிரேம் இந்த மோட்டார்சைக்கிளின் தனித்தும் மிக்க அம்சமாக இருக்கிறது.
"ஸ்கிராம்ப்ளர் 1100 டிரிபியூட் ப்ரோ மாடல் ஸ்கிராம்ப்ளர் DNA-வுக்கு பரைசாற்றும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டு எங்களின் முதல் வெளியீடாக ஸ்கிராம்ப்ளர் 1100 டிரிபியூட் ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் பாரம்பரியம் மிக்க ஏர் கூல்டு L டுவின் என்ஜினை கொண்டாடும் வகையில் புதிய ஸ்கிராம்ப்ளர் 1100 டிரிபியூட் ப்ரோ அமைந்துள்ளது," என டுகாட்டி இந்தியா நிர்வாக இயக்குனர் பிபுல் சந்திரா தெரிவித்தார்.
1971 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டுகாட்டி 750 GT மாடலில் வழங்கப்பட்ட ஏர் கூல்டு டுவின் சிலிண்டர் என்ஜினின் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் புதிய டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் 1100 டிரிபியூட் ப்ரோ அறஇமுகமாகி இருக்கிறது.
புதிய மாடலில் 1079சிசி, L டுவின் என்ஜின் வழங்கப்பட்ட உள்ளது. இந்த என்ஜின் 86 பி.ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் வகையில் டியூன் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.