Realme 9 5G : குறைந்த விலை 5ஜி போன் அறிமுகம் - மாஸ் காட்டிய ரியல்மி!

By Kevin Kaarki  |  First Published Mar 10, 2022, 3:14 PM IST

Realme 9 5G :  ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் புதிய ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.


ரியல்மி 9 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ரியல்மி நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். புதிய ரியல்மி 9 5ஜி மாடலில் 6.5 இனஅச் FHD+LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர், அதிகபட்சம் 6GB ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. 

புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, 2MP B&W கேமரா, 2MP 4cm  மேக்ரோ கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதுதவிர 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

5ஜி கனெக்டிவிட்டி கொண்ட ரியல்மி 9 5ஜி மாடலில் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ரியல்மி UI 2.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 12 அப்டேட் வழங்குவதை ரியல்மி உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஹாலோகிராஃபிக் டிசைன் கொண்டிருக்கிறது. 

ரியல்மி 9 5ஜி அம்சங்கள்:

- 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
- ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 810 பிராசஸர்
- மாலி-G57 MC2 GPU
- 4GB LPDDR4x ரேம், 64GB (UFS 2.2) மெமரி
- 6GB LPDDR4x ரேம், 128GB (UFS 2.2) மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி 
- டூயல் சிம் ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 11 மற்றும் ரியல்மி UI 2.0
- 48MP பிரைமரி கேமரா, f/1.8, LED ஃபிளாஷ்
- 2MP B&W கேமரா
- 2MP 4cm மேக்ரோ கேமரா, f/2.4
- 16MP செல்ஃபி கேமரா, f/2.1
- பக்கவாட்டில் கைரேகை சென்சார்
- 3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ
- 5G, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1, GPS/GLONASS/Beidou
- யு.எஸ்.பி. டைப் சி
- 5000mAh பேட்டரி
- 18 வாட் டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் 

புதிய ரியல்மி 9 5ஜி மாடல் ஸ்டார்கேஸ் வைட் மற்றும் மீடியோர் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4GB ரேம், 64GB மெமரி மாடல் விலை ரூ. 14,999 என்றும் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 17,499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி வலைதளம், ப்ளிப்கார்ட் மற்றும் முன்னணி ஆஃப்லைன் விற்பனை மையங்களில் மார்ச் 14 ஆம் தேதுி விற்பனைக்கு வருகிறது.

click me!