அதற்குள் விற்றுத்தீர்ந்த எம்.ஜி. எலெக்ட்ரிக் கார் ! அடுத்த விற்பனை எப்போ தெரியுமா?

By Kevin Kaarki  |  First Published Mar 10, 2022, 1:16 PM IST

எம்.ஜி. நிறுவனம் சமீபத்தில் தனது ZS EV ஃபேஸ்லிப்ட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த கார் விற்று தீர்ந்தது.


எம்.ஜி. நிறுவனம் தனது முழு எலெக்ட்ரிக் மாடலான ZS EV ஃபேஸ்லிப்ஃப்ட் வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ZS EV மாடல் முற்றிலும் புதிய டிசைன், முன்பை விட அதிக ரேன்ஜ், கூடுதல் அம்சங்களை கொண்டிருக்கிறது. புதிய ZS EV மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில், புதிய ZS EV மாடலுக்கான முன்பதிவு நிறுத்தப்பட்டு இருக்கிறது. ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்த ஆண்டிற்கான யூனிட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்ததாக எம்.ஜி. மோட்டார் தெரிவித்து உள்ளது. 2022  ZS EV ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான முன்பதிவு இந்த ஆண்டு இறுதியில் துவங்கும் என தெரிகிறது. 

Tap to resize

Latest Videos

புதிய எம்.ஜி. ZS EV மாடலின் முன்புறத்தில் என்க்ளோஸ் செய்யப்பட்ட கிரில், சார்ஜிங் சாக்கெட் எம்.ஜி. லோகோ அருகில் இடது புறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கிறது. முன்புற பம்ப்பர் மாற்றப்பட்டு கூர்மையான டிசைன், அகலமான ஏர் டேம் கொண்டிருக்கிறது. இத்துடன் 17 இன்ச் அலாய் வீல்கள், பின்புறம் புதிய டெயில் லைட் டிசைன், மேம்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இது மட்டுமின்றி புதிய ZS EV மாலில் லண்டன் ஐ ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், ரூஃப் ரெயில்கள், பின்புற ஸ்பாயிலர் உள்ளன. உள்புறம் மேம்பட்ட இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பின்புற இருக்கைகளில் ஆம் ரெஸ்ட், தனித்தனி கப் ஹோல்டர்கள், செண்டர் ஹெட்ரெஸ்ட் மற்றும் ரியர் ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

2022 எம்.ஜி. ZS EV மாடலில் 50.3 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் மற்றும் பெர்மனண்ட் மேக்ணட்  சிக்ரோனஸ் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மோட்டார் 174 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 461 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 8.5 நொடிகளில் எட்டிவிடும்.

click me!