குறைந்த விலையில் அதிரடி அம்சங்களுடன் ரெட்மி வாட்ச் அறிமுகம்

By Kevin Kaarki  |  First Published Mar 10, 2022, 11:17 AM IST

சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி வாட்ச் 2 லைட் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.


ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் சியோமி நிறுவனம் ரெட்மி வாட்ச் 2 லைட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.55 இன்ச் LCD ஸ்கிரீன், 100-க்கும் அதிக ஒர்க் அவுட் மோட்கள், ஜி.பி.எஸ்., 5 ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட், இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங், ஸ்லீப் டிராக்கிங், அதிகபட்சம் பத்து நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

ரெட்மி வாட்ச் 2 லைட் அம்சங்கள்

Tap to resize

Latest Videos

undefined

- 1.55 இன்ச் 320x360 பிக்சல் TFT LCD ஸ்கிரீன், 100+ வாட்ச் ஃபேஸ்கள்
- ப்ளூடூத் 5, சியோமி வியர் / சியோமி வியர் லைட் மற்றும் ஸ்டார்வா, ஆப்பிள் ஹெல்த்
- ஆப்டிக்கல் இதய துடிப்பு சென்சார், அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், எலெக்டிரானிக் காம்பஸ் 
- 110+ ஃபிட்னஸ் மோட்கள், 17 ப்ரோஃபஷனல் மோட்கள் 
- 24-மணி நேர இதய துடிப்பு சென்சார், SpO₂ டிராக்கிங், ஸ்லீப் குவாலிட்டி டிராக்கிங்
- மியூசிக் கண்ட்ரோல், வானிலை விவரங்கள், நோட்டிஃபிகேஷன், DND
- 5ATM (50 மீட்டர்ஸ்) வாட்டர் ரெசிஸ்டண்ட்
- 262mAh பேட்டரி

ரெட்மி வாட்ச் 2 லைட் மாடல் ஐவரி, பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் மேட்சிங் ஐவரி கிரீம், மிட்நைட் பிளாக் மற்றும் புளூ டிராகன் நிறங்களால் ஆன ஸ்டிராப்களை கொண்டிருக்கிறது. புதிய ரெட்மி வாட்ச் 2 விலை ரூ. 4999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான், Mi வலைதளங்கள், ரிலையன்ஸ் டிஜிட்டல், Mi ஹோம் ஸ்டோர் போன்ற விற்பனை மையங்களில் மார்ச் 15 ஆம் தேதி துவங்குகிறது.

click me!