Mahindra Scorpio 2022 : AD ஷூட் தொடங்கிடுச்சி.. அடுத்து வெளியீடு தான்- விரைவில் 2022 ஸ்கார்பியோ ரிலீஸ்!

By Kevin Kaarki  |  First Published Mar 10, 2022, 9:40 AM IST

Mahindra Scorpio 2022 : மஹிந்திரா நிறுவனம் புதிய ஸ்கார்பியோ மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.


புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலின் இறுதிக்கட்ட சோதனைகளை எட்டி உள்ளது. மேலும் புதிய ஸ்கார்பியோ மாடலுக்கான விளம்பர பணிகளையும் மஹிந்திரா துவங்கி விட்டது. 2022 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலுக்கான விளம்பர படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் புதிய ஸ்கார்பியோ மாடல் இறுதி டிசைன் விவரங்கள் ஆங்காங்கே தெரிகிறது.

முதல் முறையாக ஸ்கார்பியோ மாடலில் முற்றிலும் புது டிசைன் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடலின் முன்புறம் கூர்மையாக காட்சியளிக்கும் ஹெட்லேம்ப்கள், சப்டில் குரோம், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட்களில் ஹாலோஜென் யூனிட் வழங்கப்படலாம். இதில் உள்ள மல்டி-ஸ்லாட் கிரில் மஹிந்திரா XUV700 மாடலில் உள்ளதை விட சிறியதாக இருக்கிறது. 

Tap to resize

Latest Videos

இதன் பம்ப்பர் மற்றும் டெயில் பகுதியில் சி வடிவிலான சரவுண்ட்கள் உள்ளன. இவை பகலில் எல்.இ.டி. டே-டைம் ரன்னிங் லைட்களாக செயல்படுகின்றன. ஃபாக் லேம்ப்களில் எல்.இ.டி. லைட் பயன்படுத்தப்படலாம் என தெரிகிறது. இதன் ஒட்டுமொத்த வெளிப்புற தோற்றம் தற்போதைய மாடலை போன்று காட்சியளித்தாலும், அனைத்து பாடி பேனல்களும் புதிதாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ மாடல் தற்போதைய மாடலை விட அளவில் பெரிதாக உருவாகி இருக்கிறது. புதிய ஸ்கார்பியோ மாடலின் உள்புறத்தில் அதிக பிரீமியம் ஃபினிஷ் மற்றும் அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய ஸ்கார்பியோ மாடலை மஹிந்திரா நிறுவனம் மேம்பட்ட லேடர் ஃபிரேம் சேசிஸ் மீது உருவாக்கி இருக்கிறது. இதே சேசிஸ் புதிய தார் மாடலிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. 

2022 மஹிந்திரா ஸ்கார்பியோ மாடலில் 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த என்ஜின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். இத்துடன் 4-வீல் டிரைவ் வசதி வழங்கப்படலாம்.

click me!