ஷாக்கிங் விலை, அதிரடி அம்சங்களுடன் அறிமுகமான ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிஸ்

By Kevin Kaarki  |  First Published Mar 9, 2022, 1:46 PM IST

சியோமி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது.


சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரெட்மி நோட் 11 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த 30 மாதங்களில் ரெட்மி முதல் முறையாக ஆஃப்லைன் நிகழ்வில் புதிய ஸ்மார்ட்போன்களை இன்று அறிமுகம் செய்தது. இன்றைய நிகழ்வில் ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல்கள் அறிமுகமாகி இருக்கின்றன. 

அம்சங்களை பொருத்தவரை ரெட்மி நோட் 11 ப்ரோ மாடலில் 6.67 இன்ச் FHD+ 120Hz AMOLED டாட் டிஸ்ப்ளே, 16MP செல்ஃபி கேமரா, மீடியாடெக் ஹீலியோ ஜி96 பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம், லிக்விட் கூலிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் 6.67 இன்ச் FHD+ 120Hz AMOLED டாட் டிஸ்ப்ளே, 16MP செல்ஃபி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், லிக்விட் கூலிங், அதிகபட்சம் 8GB ரேம், 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் EVOL ப்ரோ டிசைன், கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. 

இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 67 வாட் டர்போசார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது. ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடல் ஸ்டெல்த் பிளாக் மற்றும் ஃபேண்டம் வைட், ஃபிராஸ்டெட் கிளாஸ் பேக் மற்றும் மிரேஜ் புளூ நிறங்களில் கிடைக்கிறது. 

ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்டார் புளூ மற்றும் ஸ்டெல்த் பிளாக் மற்றும் ஃபிராஸ்டெட் கிளாஸ் பேக், ஃபேண்டம் வைட் நிறங்களில் கிடைக்கிறது. 

விலை விவரங்கள்:

ரெட்மி நோட் 11 ப்ரோ 6GB ரேம், 128GB மெமரி மாடல் ரூ. 17,999
ரெட்மி நோட் 11 ப்ரோ 8GB ரேம், 128GB மெமரி மாடல் ரூ. 19,999
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி 6GB ரேம், 128GB மெமரி மாடல் ரூ. 20,999
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி 8GB ரேம், 128GB மெமரி மாடல் ரூ. 22,999
ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி 8GB ரேம், 256GB மெமரி மாடல் ரூ. 24,999

ரெட்மி நோட் 11 ப்ரோ 5ஜி மாடலின் விற்பனை மார்ச் 23 ஆம் தேதி துவங்குகிறது. புதிய ரெட்மி நோட் 11 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலின் விற்பனை மார்ச் 15 ஆம் தேதி துவங்குகிறது. இரு ஸ்மார்ட்போன்களும் அமேசான், Mi வலைதளங்கள் மற்றும் Mi ஹோம் ஸ்டோர், ஆஃப்லைன் ஸ்டோர்களில் துவங்குகிறது. 

புதிய ரெட்மி நோட் ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஏற்கனவே ரெட்மி போன் பயன்படுத்துவோர் தங்களின் ஸ்மார்ட்போனை எக்சேன்ஜ் செய்யும் போது கூடுதலாக ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி பெற முடியும்.

click me!