Lexus NX 350h SUV : பவர்ஃபுல் என்ஜின், டாப் டக்கர் அம்சங்கள் - 2022 லெக்சஸ் NX 350h அறிமுகம்

By Kevin Kaarki  |  First Published Mar 9, 2022, 12:22 PM IST

Lexus NX 350h SUV : லெக்சஸ் நிறுவனம் இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2022 NX 350h எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.


லெக்சஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் 2022 NX 350h ஆடம்பர எஸ்.யு.வி. மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய லெக்சஸ் NX 350h மாடல் விலை ரூ. 64.90 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய எஸ்.யு.வி. மாடல் ஒற்றை பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் மற்றும் எக்ஸ்குசிட், லக்சரி, எஃப்-ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

தோற்றத்தில் புதிய லெக்சஸ் NX 350h முந்தைய தலைமுறை மாடலை போன்ற ப்ரோஃபைல் கொண்டிருக்கிறது. எனினும், இம்முறை லெக்சஸ் NX 350h சற்று கூர்மையான டிசைன் கொண்டிருக்கிறது. 2022 NX 350h மாடலில் புதிதாக சிங்கில் பீஸ் ஹெட்லேம்ப், பெரிய ஸ்பிண்டில் கிரில், புதிய பம்ப்பர், நீண்ட ஹூட், முற்றிலும் புதிய டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

Tap to resize

Latest Videos

புதிய காரின் உள்புறமும் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இந்த மாடலில் 10.3 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், புதிய ஸ்டீரிங் வீல் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய லெக்சஸ் NX 350h டாப் எண்ட் மாடலில் 360 டிகிரி பார்கிங் கேமரா, ஆட்டோ ஹெட்லேம்ப் மற்றும் வைப்பர்கள், கலர் HUD, தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் மொபைல் சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் 64 நிறங்களை கொண்ட ஆம்பியண்ட் லைட்டிங், பானரோமிக் சன்ரூஃப், எலெக்ட்ரிக் முன்புற சீட்கள், பின்புறம் எலெக்ட்ரிக் முறையில் மடிந்து கொள்ளும் இருக்கைகள், பாதுகாப்பிற்கு ABS, EBD, ESC, டிராக்‌ஷன் கண்ட்ரோல், முன்புறம் மற்றும் பின்புற பார்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

புதிய லெக்சஸ் NX 350h மாடலில் 2.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 192 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. பெட்ரோல் என்ஜினுடன் இ மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இணைந்து எஸ்.யு.வி.-க்கு 244 ஹெச்.பி. திறனை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு e-CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. 

இந்திய சந்தையில் புதிய 2022 லெக்சஸ் NX 350h மாடல் ஆடி Q5, ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ. X3, மெர்சிடிஸ் பென்ஸ் GLC மற்றும் வால்வோ XC60 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. 

விலை விவரங்கள்

லெக்சஸ் NX 350h எக்ஸ்குசிட் விலை ரூ. 64.90 லட்சம்
லெக்சஸ் NX 350h லக்சரி விலை ரூ. 69.50 லட்சம்
லெக்சஸ் NX 350h எஃப் ஸ்போர்ட் விலை ரூ. 71.60 லட்சம் 

அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

click me!