சாம்சங் நிறுவனத்தின் இரண்டு புதிய கேலக்ஸி லேப்டாப் மாடல்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
சாம்சங் நிறுவனம் தனது புதிய லேப்டாப் சீரிஸ் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. கேலக்ஸி புக் 2 ப்ரோ மற்றும் கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 போன்ற மாடல்களின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசரை அமேசான் வெளியிட்டுள்ளது. இரு மாடல்களும் 'Coming Soon' பேட்ஜ் உடன் அமேசானில் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன.
முன்னதாக இரு லேப்டாப் மாடல்களும் பார்சிலோனாவில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. மேலும் இதன் அம்சங்களும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த மாடலில் விண்டோஸ் 11 ஓ.எஸ்., 13.3. இன்ச் மற்றும் 15.6 இன்ச் FHD+1920x1080 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, இண்டெல் கோர் ஐ7 மற்றும் கோர் ஐ5 பிராசஸர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன் 32GB LPDDR5 ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதன் 15.6 இன்ச் மாடல் இருவித இண்டெர்னல் அல்லது எக்ஸ்டெர்னல் கிராஃபிக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும் இவற்றில் அதிகபட்சமாக 1TB வரையிலான NVMe SSD ஸ்டோரேஜ், டூயல் ஸ்டீரியோ 40 வாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், கனெக்டிவிட்டிக்கு வைபை 6E, ப்ளூடூத் 5.1, தண்போர்ல்ட் 4, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், யு.எஸ்.பி. 3.2 டைப் ஏ போர்ட், HDMI போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்டு ரீடர் வழங்கப்பட்டு இருக்கிறது.
கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 அம்சங்கள்:
- 13.3 இன்ச் மற்றும் 15.6 இன்ச் FHD+ 1920x1080 பிக்சல் சூப்பர் AMOLED டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே
- இண்டெல் கோர் ஐ7 மற்றும் கோர் ஐ5 பிராசஸர்கள்
- அதிகபட்சம் 32GB LPDDR5 ரேம்
- 1TB NVMe SSD ஸ்டோரேஜ்
- டூயல் ஸ்டீரியோ 40 வாட் ஸ்பீக்கர்கள்
- டால்பி அட்மோஸ்
- வைபை 6E மற்றும் ப்ளூடூத் 5.1
- தண்போர்ல்ட் 4, யு.எஸ்.பி. டைப் சி போர்ட், 2 யு.எஸ்.பி. 3.2 டைப் ஏ போர்ட், HDMI போர்ட்
- 3.5mm ஹெட்போன் ஜாக்
- மைக்ரோ எஸ்.டி. கார்டு ரீடர்
- அதிகபட்சம் 21 மணி நேர பேக்கப் வழங்கும் பேட்டரி
சாம்சங்கின் இரு புதிய கேலக்ஸி லேப்டாப் மாடல்களின் இந்திய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.