இந்திய சந்தையில் பஜாஜ் பல்சர் 200 சீரிஸ் மாடல்களில் புது அப்டேட் வழங்க பஜாஜ் ஆட்டோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் NS200 மற்றும் RS200 மோட்டார்சைக்கிள் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது. அப்டேட் செய்யப்பட்ட மாடல்கள் ஏற்கனவே விற்பனையகம் வரத்துவங்கி விட்டன. முந்தைய மாடல்களில் வழங்கப்பட்டு இருந்த வெள்ளை நிற அலாய் வீல்களுக்கு மாற்றாக புது மாடல்களில் கருப்பு நிற அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பல்சர் NS200 மற்றும் RS200 மாடல்களின் விலை முன்பை போன்றே முறையே ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 195 என்றும் ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 719 என்றே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இது பிப்ரவரி மாத விலை உயர்வுக்கு பின் அமலான புதிய விலை ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளன.
புதிய பிளாக் நிற அலாய் வீல்கள் தவிர இரு மாடல்களிலும் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. பஜாஜ் பல்சர் NS200 மற்றும் RS200 மாடல்களில் 199சிசி, சிங்கில் சிலிண்டர் லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24.5 பி.எஸ். பவர், 18.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகின்றன. இதன் பெரிமீட்டர் ஃபிரேமில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது.
வழக்கமான பல்சர் மாடல்களை அதிகளவு அப்டேட் செய்யப்பட்டதை தொடர்ந்து NS மாடல்களை பஜாஜ் அப்டேட் செய்து வருகிறது. புதிய 200 சீரிஸ் மாடல்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் புது அப்டேட் விற்பனையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என பஜாஜ் நிறுவனம் நம்புகிறது.