9 நாட்களில் 1200 பேரிடம் கால்பந்து சூதாட்ட ஆப் மூலம் ரூ.1400 கோடி அபேஸ்!

By Rsiva kumar  |  First Published Aug 18, 2023, 3:03 PM IST

வெறும் 9 நாட்களில் கிட்டத்தட்ட 1200 பேரிடம் கால்பந்து சூதாட்ட ஆப் மூலமாக தோராயமாக ரூ.1400 கோடி வரை மோசடி செய்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.


நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலமாக ஏராளமானோர் பணத்தை இழந்து தற்கொலை செய்து வரும் நிலை தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தான், சீனாவைச் சேர்ந்த ஒருவர் தனது கூட்டாளிகளுடன் இனைந்து 1200 இந்தியர்களிடன் கால்பந்து சூதாட்ட ஆப் மூலமாக ரூ.1400 கோடி வரை மோசடி செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

IRE vs IND 1st T20:அயர்லாந்துக்கு அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் யாருக்கு வாய்ப்பு? டீம் எப்படி அமையும்?

Tap to resize

Latest Videos

கால்பந்து சூதாட்ட ஆப் மூலமாக மோசடி செய்து வந்த கும்பலை கண்டுபிடிக்க குஜராத் காவல்துறை சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. இந்த குழு மேற்கொண்ட தீவிர விசாரணையில் இதுவரையில் மோசடி செய்து வந்தவர் சீனாவின் ஷென்சென் பகுதியைச் சேர்ந்த வூ உயன்பே என்பது தெரியவந்தது.

Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023: இலங்கையில் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!

இது தொடர்பாக குஜராத் போலீசார் கூறியிருப்பதாது: கடந்த 2020 முதல் 2022 ஆண்டு வரையில் சீன நாட்டவர் இந்தியாவில் இருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நேரத்தில், அவர் பதான் மற்றும் பனஸ்கந்தா மாவட்டங்களில் செயல்பட்டதாகவும். குஜராத்தில் உள்ள தனது கூட்டாளிகளுடன் இணைந்து, அவர் கடந்த மே 2022 ஆம் ஆண்டு கால்பந்து சூதாட்ட ஆப்பை அறிமுகப்படுத்தினார். இதன் மூலமாக இந்தியர்களை சூதாட்டத்தில் ஈடுபட வைத்து அவர்களிடமிருந்து கோடிக்கணக்கில் மோசடி செய்து வந்துள்ளனர்.

IRE vs IND: இதுவரையில் இந்தியா – அயர்லாந்து நேருக்கு நேர் போட்டிகள்: யாருக்கு வாய்ப்பு?

அதுவும், 15 முதல் 75 வயதானவர்களை குறி வைத்து அவர்களிடமிருந்து நாள் ஒன்றுக்கு ரூ.200 கோடி வீதம் மோசடி செய்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர். குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் டானி டேட்டா என்ற ஆப் மூலமாக 15 முதல் 75 வயது நிரம்பியவர்களை குறி வைப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஆப் ஆனது வெறும் 9 நாட்களுக்கு மட்டுமே செயல்பட்டுள்ளது. அதன் பிறகு செயல்படுவதை நிறுத்தியதைத் தொடர்ந்து தான் ஒவ்வொருவரும் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்துள்ளனர்.

இதையடுத்து சிஐடி போலீசார் கவனம் முழுவதும் உயன்பேக்கு உதவி அந்த 9 பேரை கைது செய்தனர். மேலும், அவர்கள் மோசடி செய்த பணத்தையெல்லாம் ஹவாலா நெட்வொர்க் மூலமாக அனுப்புவதற்கு உயன்பேக்கு உதவியாக கூறப்படுகிறது. மோசடி பணத்தையெல்லாம் மாற்றுவதற்கு ஷெல் நிறுவனங்களை நிறுவியது கண்டுபிடிக்கப்பட்டது தெரியவந்தது.

World Cup 2023: உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு திலக் வர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் சரியான தேர்வு – ரவி சாஸ்திரி!

குஜராத் காவல்துறை ஆகஸ்ட் 2022 இல் உயன்பே மீது மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி தங்கள் ஆரம்ப வழக்கை பதிவு செய்த போதிலும், அவர் ஏற்கனவே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டார். அவர் சிங்கப்பூர் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து ஷென்சென் பகுதியிலிருந்து மீண்டும் தனது மோசடியை தொடர்ந்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Ireland vs India: 1st T20: முதல் முறையாக கேப்டனான ஜஸ்ப்ரித் பும்ரா: இன்று இந்தியா – அயர்லாந்து பலப்பரீட்சை!

ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற அண்டை பகுதிகளுடன் சேர்ந்து சீனாவின் ஷென்சென் நகரிலிருந்து தனது மோசடி வலையமைப்பை தொடர்ந்து இயக்கி வருவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர். எனினும் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்னமும் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

click me!