ஜியோவில் இந்த ரீசார்ஜ் பிளான் தெரியுமா? 3 மாத்திற்கு டேட்டா, வாய்ஸ்கால்!

By Dinesh TG  |  First Published Dec 22, 2022, 9:19 AM IST

3 மாதம் இருக்கக்கூடிய ரீசார்ஜ் பிளானைத் தேடுகிறீர்களா, ஆனால் வெறும் 84 நாட்கள் தான் உள்ளதா? இதோ ஜியோவில் 90 நாட்களுக்கான ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தைப் பாருங்கள்.
 


ஜியோவில் பலதரப்பட்ட ரீசார்ஜ் பேக்குகள் உள்ளன. நீண்ட கால வேலிடிட்டியும் வேண்டாம், குறைந்த வேலிடிட்டியும் வேண்டாம் என்று நினைப்பவர்களுக்காகவே 749 ரூபாய்க்கான பிளான் உள்ளது. இது மூன்று மாதம் வேலிடிட்டி, வாய்ஸ்கால், டேட்டாவுடன் வருகிறது. 

ஜியோ ரூ.749 பிளான் விவரங்கள்:

Tap to resize

Latest Videos

90 நாட்கள் பேக் வேலிடிட்டியுடன், இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டா, வீதம் 90 நாட்களுக்கு 180ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஜியோ அன்லிமிடெட் டேட்டா சலுகை முடிந்ததும், அதன் வேகம் 64 Kbps ஆகக் குறைகிறது. இந்த பேக்கில் அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோடிவி உள்ளிட்ட ஜியோ செயலிகளுக்கான இலவச அணுகல் ஆகியவை அடங்கும். JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவையும் கிடைக்கிறது. 

OIS கேமராவுடன் களமிறங்கும் Redmi Note 12 Pro.. அறிமுக தேதி அறிவிப்பு!

ஜியோ ட்ரூ 5G குறிப்பிட்ட சில நகரங்களில் வசிக்கும் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுகிறது. 5G வெல்கம் பேக் சலுகையின் கீழ் அன்லிமிடேட் 5G டேட்டாவையும் வழங்குகிறது. 5G ஸ்மார்ட்போன் வைத்திருக்கும், Jio 5G வெல்கம் மெசேஜ் பெற்ற பயனர்கள் வேகமான 5ஜி இணைப்பைப் பயன்படுத்தலாம்.

2ஜி தினசரி டேட்டாவை வழங்கும் அதே 700 மதிப்பில், மற்றொரு திட்டத்தையும் கொண்டுள்ளது. ரூ.719 விலையில்,168ஜிபி மொத்த டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இதேபோன்ற அன்லிமிடேட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலி பலன்கள் வழங்கப்படுகின்றன.  இந்த திட்டமும் ஜியோ வெல்கம் திட்டத்தின் கீழ் வருகிறது. தகுதியான பயனர்கள் 5ஜி இணைப்பை அன்லிமிடெட் ஜியோ 5ஜி மூலம் பெறலாம்.

click me!