கூகுள் நிறுவனம் வரும் மாதங்களில் 10000 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், அதில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் இந்த 2022 என்பது ஒரு கடினமான ஆண்டு. ட்விட்டரில் தொடங்கி, மெட்டா, அமேசான் என பெரும் நிறுவனங்களில் இந்த 2022 ஆண்டில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அந்த வரிசையில் தற்போது அடுத்த பெரிய பணி நீக்க நடவடிக்கை எடுக்கும் நிறுவனமாக கூகுள் இருக்கலாம்.
வரும் 2023 ஆம் ஆண்டில், இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் இன்னும் மோசமாக இருக்கும் என்று சில சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன. ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அடுத்த பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. கூகுள் தரப்பில் இன்னும் பணிநீக்கங்களை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், கூகுள் நிறுவனம் வரும் மாதங்களில் 10000 பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற அனைத்து பணியாளர்கள் கூட்டத்தில், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை பணிநீக்கங்கள் குறித்து சூசகமாக தெரிவித்தார் . இதற்கிடையில், கூகுள் நிறுவனம் துறைகள் வாரியாக பணியாளர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து வருகிறது, மேலும் அதில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் வெளியேறும்படி கேட்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. எதிர்காலத்தில் என்ன நடக்குமோ என்று கூகுள் ஊழியர்கள் கவலையில் உள்ளனர். கூகுள் பணிநீக்கங்கள் பற்றி இதுவரை உறுதிப்படுத்தப்படாத சில விவரங்கள் வந்துள்ளன.
Twitter Layoff: ட்விட்டரில் தொடரும் பணி நீக்கம்! சாப்ட்வேர் இன்ஜினியர்கள் வெளியேற்றம்!!
புதிய தரவரிசை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் நுட்பத்தைப் பயன்படுத்தி கூகுள் தனது ஊழியர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்வதாக இதற்கு முன்பு தகவல்கள் வந்தன. அதன்படி, இந்த புதிய செயல்திறன் மேலாண்மை அமைப்பானது, ஆயிரக்கணக்கான பணியாளர்களைக் கண்டறிந்து அதை மேலாளர்களுக்கு அடையாளங் காட்ட உதவும் என்று கூறப்படுகிறது.
இந்த 2022 ஆண்டில் வெளிவந்த டாப் பிரீமியம் ஸ்மார்ட்போன்கள்!
2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும், அதன்பிறகு சில மாதங்களுக்குள்ளாகும் கூகுள் செயல்திறன் மதிப்பீட்டை முடித்து, பின்னர் பணிநீக்கங்களை அறிவிக்கும் என்று கூறப்படுகிறது. மோசமான செயல்பாட்டிற்காக கிட்டத்தட்ட 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது இந்தியா உட்பட உலகளவில் உள்ள கூகுள் அலுவலகங்களில் நடக்கும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் ஊழியர்களுடனான நடந்த சந்திப்பின் போது, வரவிருக்கும் பணிநீக்கங்கள் குறித்து ஒருவர் அவரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, "எதிர்காலத்தை கணிப்பது கடினம்" என்று தெரிவித்துவிட்டார். கூகுள் இதுவரை பணிகளை குறைக்கவில்லை, ஆனால் கடந்த சில மாதங்களில் பணியமர்த்தலை குறைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணியாளர்களை மிகவும் திறமையாக செயல்படுமாறு ஏற்கெனவே சுந்தர் பிச்சை எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.