OnePlus 11 அறிமுக தேதி அறிவிப்பு! 3 அம்சங்கள் உறுதி!!

By Dinesh TGFirst Published Dec 21, 2022, 6:21 PM IST
Highlights

ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன் வரும் பிப்வரி 7 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த அறிமுக விழா இந்தியாவில் வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் உற்பத்தியில் முன்னனி நிறுவனமான ஒன்பிளஸ் தற்போது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனை தயார் செய்து வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியாவிலும் உலகளாவிய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. OnePlus 11 அறிமுக விழாவில் OnePlus Buds Pro 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் வெளியிட உள்ளது

அறிமுகத்திற்கு முன்னதாக, OnePlus 11 இன் பல முக்கிய சிறப்பம்சங்கள் அம்சங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 3 அம்சங்களை இங்குக் காணலாம்.

Snapdragon 8 Gen 2 பிராசசர்:

வரவிருக்கும் OnePlus 11 ஃபிளாக்ஷிப் ஃபோனில் Snapdragon 8 Gen 2 SoC இருக்கும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தற்போதுள்ள மிகவும் சக்திவாய்ந்த பிராசசர் ஆகும். இதன் வேரியண்ட் மாடல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் மெமரி வேரியண்டில் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OIS கேமராவுடன் களமிறங்கும் Redmi Note 12 Pro.. அறிமுக தேதி அறிவிப்பு!

அலர்ட் ஸ்லைடர்:

OnePlus 11 இன் அறிமுக தேதியை உறுதிப்படுத்தும் நேரத்தில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அலர்ட் ஸ்லைடர் என்ற அம்சத்தையும் வெளியிட்டுள்ளது. அண்மையில் OnePlus 10T 5G உட்பட பல்வேறு OnePlus சாதனங்களில் இருந்து எச்சரிக்கை ஸ்லைடர் அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது OnePlus 11 உடன் அலர்ட் ஸ்லைடரை மீண்டும் கொண்டு வருகிறது.

ஹாசல்பிளாட் கேமராக்கள்

OnePlus 11 க்கு Hasselblad நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது. கேமரா சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை இருப்பினும். Hasselblad கருத்தில் கொண்டு கேமரா செயல்திறன் சிறந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். முக்கிய ஸ்மார்ட்போன்களில் Hasselblad உடன் கூட்டு சேர்வது என்பது புதிய விஷயம் இல்லை.

இந்த உறுதிப்படுத்தப்பட்ட மூன்று அம்சங்களைக் கருத்தில் கொண்டு, OnePlus 11 ஸ்மார்ட்போனில் சிறந்த கேமராக்கள் மற்றும் செயல்திறன் கொண்ட மென்மையான பயனர் அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

click me!