சிஇஓ பதவியில் இருந்து எலோன் மஸ்க் விரைவில் ராஜினாமா? மக்கள் முட்டாள்களாக இருப்பதாக மறைமுக குற்றச்சாட்டு!

By Dinesh TG  |  First Published Dec 21, 2022, 12:53 PM IST

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை ஏற்கும் அளவுக்கு முட்டாள்தனமாக யாரையாவது கண்டறிந்தவுடன் சிஇஓ பதவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.


ட்விட்டரின் புதிய தலைவரான எலான் மஸ்க் பதவிக்கு வந்தார். ஆனால், அந்த பதவிக்கு ஏற்ப அவர் செயல்படவில்லை என்றும், மாறாக சர்வதிகார போக்கை கையாள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆயிரக்கணக்கான பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கினார். விளம்பர வருவாயை மாற்றியமைத்தார். ப்ளூ டிக் பெறுவதற்கு கட்டணங்களை விதித்தார். இதனால், எலான் மஸ்கிற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு விமர்சனங்கள் வந்தன. 

இதனிடையே, ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா என்று எலான் மஸ்க் ட்விட்டரில் கருத்துக்கணிப்பை நடத்தினார். எதிர்பார்த்தது போலவே அவர் பதவி விலக வேண்டும் என்று கருத்துக் கணிப்புகள் வந்தன. இருப்பினும், அதை எலான் மஸ்க் ஏற்க மறுத்துள்ளார். மேலும், அவ்வாறு பதவி விலக வேண்டும் என்று வாக்களித்தவர்களை முட்டாள் என்று மறைமுகமாக சாடியுள்ளார்.

Tap to resize

Latest Videos

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை ஏற்கும் அளவுக்கு முட்டாள்தனமாக யாரையாவது கண்டறிந்தவுடன், சிஇஓ பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். எனவே மஸ்க்கிற்கு தற்போது நிறுவனத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். ஆனால் தனது இடத்தை நிரப்பும் அளவுக்கு முட்டாள் யாரையாவது கண்டவுடன் வெளியேற திட்டமிட்டுள்ளார். மேலும், மென்பொருள் மற்றும் சேவையக குழுக்களுக்கு தலைவராக இருக்கப் போவதாகவும் எலான் மஸ்க் கூறினார். 

பரிதாப நிலையில் Twitter பணியாளர்கள்? இந்திய அலுவலகத்ததின் நிலைமை எப்படி இருக்கிறது?

மஸ்க் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் அவரை வியப்பில் ஆழ்த்தியது. ட்விட்டரை ஒரு சுதந்திரமான பேச்சு தளமாக மாற்றுவது பற்றிய அவரது எண்ணம், அவருக்கு வாக்குகளைப் பெறும் என்று மஸ்க் நினைத்தார், ஆனால் பெரும்பாலான ட்விட்டர் பயனர்கள் அவரைப் பதவி விலகிக்கொள்ளவே விரும்பினர். கருத்துக்கணிப்பின்படி, 57.5 சதவீத ட்விட்டர் பயனர்கள் மஸ்க் பதவி விலகுவதற்கு வாக்களித்துள்ளனர், அதே நேரத்தில் 42.5 சதவீதம் பேர் அவர் தலைவராக தொடரலாம் என்று விரும்புகிறார்கள். முடிவுகள் வெளியானவுடன், மஸ்க் மீண்டும் வாக்கெடுப்பை நடத்துவதாகக் கூறினார் , ஆனால் இந்த முறை, ட்விட்டர் புளூ சந்தாதாரர்களை மட்டுமே வாக்களிக்க அனுமதிப்பதாகக் கூறினார்.

மஸ்க் வாக்கெடுப்பு முடிவுகளுக்குக் கட்டுப்படாததால், கிம்டாட்காம் என்ற பெயர் கொண்ட ஒரு பயனர், இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை நடத்துவது "புத்திசாலித்தனம்" என்று பரிந்துரைத்தார். மற்றொரு பயனர் ப்ளூ சந்தாதாரர்களை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். "ப்ளூ சந்தாதாரர்கள் மட்டுமே கொள்கை தொடர்பான கருத்துக்கணிப்புகளில் வாக்களிக்க முடியும்" என்று அவர் கூறினார், அதற்கு மஸ்க், "நல்ல விஷயம். ட்விட்டர் அந்த மாற்றத்தை ஏற்படுத்தும்." என்று கூறினார்.

click me!