Twitter, Facebook, Google வரிசையில் Xiaomi நிறுவனத்திலும் ஆட்குறைப்பு நடவடிக்கை ஆரம்பம்!

By Dinesh TG  |  First Published Dec 20, 2022, 4:11 PM IST

டுவிட்டர், மெட்டா, கூகுள் என பல முன்னனி நிறுவனங்களில் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில், ஷாவ்மி நிறுவனத்திலும் பணி நீக்க நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.


முன்னனி சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Xiaomi நிறுவனமும் பொருளாதார மந்தநிலை காரணமாக, பல பிரிவில் உள்ள பணியாளர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது. இந்த நேரத்தில் மொத்தம் எத்தனை பேர் வேலையில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்பது குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை, இருப்பினும் சுமார் 15 சதவீதம் பணியாளர்கள் பணிநீக்கம் செய்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன. 

Xiaomi இன் 2022க்கான மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையின்படி, சுமார் 35,314 பணியாளர்களை ஷாவ்மி நிறுவனம் கொண்டுள்ளது. அவற்றில்,  32,000 க்கும் அதிகமான பணியாளர்கள் சீனாவின் பிரதான மையத்தில் பணியாற்றி வருகின்றனர்.  சீன நாளிதழான சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின்படி, பணியாளர்களால் லாபம் குறைவதைத் தவிர்ப்பதற்காக, வணிக வளர்ச்சி என்ற பெயரில் சீனாவில் பணி நீக்க நடவடிக்கை எடுக்க்படுகிறது. சீன தொழிலாளர் சட்டங்களின்படி, 20க்கும் மேற்பட்ட வேலைகளை பணிநீக்கம் செய்தால் அந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் அதிகாரிகளுக்கு அறிவிப்பு வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

சீன சமூக ஊடக தளங்களான Weibo, Xiaohongshu மற்றும் Maimai ஆகியவை முழுவதும் Xiaomi ஆட்குறைப்பு நடவடிக்கை பற்றி பேசப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஷாவ்மியின் ஸ்மார்ட்போன் பிரிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் வருவாய் 11 சதவீதம் சரிந்ததாக கூறப்படுகிறது. Counterpoint Research படி, ஷாவ்மி நிறுவனத்தின் மூன்று முக்கிய பிரிவுகளான ஸ்மார்ட்போன்கள், AIoT மற்றும் இணைய சேவைகளில் ஏற்பட்டுள்ள மந்தநிலையே இந்த வருவாய் சரிவுக்குக் காரணம் என்று தெரிகிறது. 

பரிதாப நிலையில் Twitter பணியாளர்கள்? இந்திய அலுவலகத்ததின் நிலைமை எப்படி இருக்கிறது?

இந்தியாவில் உள்ள Xiaomi பணியாளர்களும் பாதிக்கப்படுகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 23 சதவீதத்திலிருந்து 21 சதவீதமாகக் குறைந்திருந்தாலும், இந்தியாவில் ஷாவ்மி பெரும் வளர்ச்சியைப் பெற்றுள்ளது, மேலும் இது இந்தியாவில் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. 

கடந்த சில வாரங்களில், பல தொழில்நுட்ப ஜாம்பவான்கள் -- உலக அளவிலும் இந்தியாவிலும்  -- பொருளாதார மந்தநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களின் செயல்பாட்டு செலவுகளை குறைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துவருகின்றன. மெட்டா, அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ், ட்விட்டர் மற்றும் பைஜூஸ் போன்ற பெரு நிறுவனங்களில் தான் இப்படியான மோசமான நிலை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!