2022 இல் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 பயனுள்ள WhatsApp Tips & Tricks!

By Dinesh TGFirst Published Dec 21, 2022, 5:20 PM IST
Highlights

2022 ஆம் ஆண்டில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஐந்து பயனுள்ள வாட்ஸ்அப் டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ்களை இங்கு காணலாம். இவை உங்களுடைய வாட்ஸ்ப்  அனுபவத்தை மேம்படுத்தும்.
 

யாருக்கும் தெரியாமல் இருக்கலாம்:

வாட்ஸ்அப்பில் பிரைவேசி செட்டிங்ஸை மாற்றுவதன் மூலம் WhatsApp இல் நீங்கள் ஆன்லைனில் இருப்பதை மறைக்க முடியும். Settings > Privacy > Last seen and online என்று செல்லவும்.  அதில் "Nobody" என்பதைத் தட்டவும், பின்னர் "Same as last seen" என்பதைத் கிளிக் செய்யவும். ஆனால், இப்படி நீங்கள் செய்தால், உங்களால் மற்றவர்களின் ஆன்லைன் நிலையை உங்களாலும் பார்க்க முடியாது. இந்த அம்சம் அடிப்படையில் யாருக்கும் தெரியப்படுத்தாமல் நீங்கள் ஆன்லைனில் இருப்பதற்கு உங்களுக்கு உதவுகிறது.

டெலிட் ஆன மெசேஜ்களை மீட்டெடுக்கலாம்:

தற்செயலாக டெலிட் மெசேஜ்களை மீண்டும் கொண்டு வரும் அம்சம் வாட்ஸ்அப் இப்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது, ​​நீங்கள் ஒரு மெசேஜை தவறுதலாக நீக்கினால், Undo பொத்தானை வைப்பதன் மூலம் அதைத் ஐந்து வினாடிக்குள் மீட்டு கொண்டு வரலாம். இது "Delete message for me" என்பதை அழுத்தினால் மட்டுமே இந்த அம்சம் வரும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த அம்சம் Android மற்றும் iPhone இல் உள்ள அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும்.

நீண்ட நேரம் வாய்ஸ் ரெக்கார்டு செய்யலாம்:

நீண்ட நேர வாய்ஸ் மெசேஜை அனுப்ப வேண்டுமா, அதுவும் இடைவெளி விட்டு இடைவெளி விட்டு, நிறுத்தி பேசி அனுப்ப வேண்டுமா. இப்போது அதுவும் சாத்தியமே. மைக் ஐகானை நீண்ட நேரம் அழுத்தினால் போதும் சாத்தியம். இந்த மைக் ஐகான் கீழ் வலது பக்கத்தில் தெரியும். மைக் ஐகானை நீண்ட நேரம் அழுத்தி, மேலே ஸ்லைடு செய்து லாக் செய்தால் போதும். வாட்ஸ்அப் உங்கள் குரல் செய்தியைப் பதிவுசெய்யத் தொடங்கும், மேலும் சிவப்பு வண்ண மைக் ஐகானைப் பயன்படுத்தி அதை Pause செய்யவும் முடியும். 

WhatsApp Update: மாத்தி மெசேஜ் அனுப்பிட்டேங்களா? இனி கவலை வேண்டாம்!

வாய்ஸ்கால் ரெக்கார்டு செய்யலாம்:

Cube ACR எனப்படும் மூன்றாம் தரப்பு செயலி மூலம் வாட்ஸ்அப் அழைப்புகளைப் பதிவு செய்யலாம். இது Play Store இல் கிடைக்கிறது. நீங்கள் அதை இன்ஸ்டால் செய்து, உங்கள் எல்லா கால்களையும் பதிவு செய்யலாம். அவற்றை இந்த ஒரே செயலில் காணலாம்.

மற்றவர்கள் டெலிட் செய்த மெசேஜ்களை பார்க்கலாம்:

டெலிட் செய்யப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை மீட்டெடுக்க அல்லது படிக்க விரும்பும் நபர்கள்,"Get Deleted Messages" செயலியை மூலம் கொண்டு வரலாம். இது ப்ளே ஸ்டோரில் உள்ளது. இருப்பினும், இது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த ஆப்ஸ் பேக்கிரவுண்டில் இயங்குவதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் அரட்டையைத் திறந்து வைத்து, அந்த மெசேஜ் நீக்கப்பட்டால், நீக்கப்பட்ட மெசேஜை உங்களால் படிக்க முடியாது. அரட்டை திறக்காத போது (மெசேஜ் நீக்கப்படும் நேரத்தில்) டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்கைள வழங்க மட்டுமே ஆப்ஸ் உங்களுக்கு உதவும்

click me!