ரூ.99 - க்கு ஜியோ ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் என்ன நடக்கும்...?
ஜியோ பிரைம் திட்டத்தை தொடர்ந்து பெற ரூபாய் 99 கு, வரும் 31 ஆம் தேதிக்கும் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஒரு வேளை ரீசார்ஜ் செய்ய மறந்தாலோ அல்லது ரிலையன்ஸ் ஜியோ சேவையை பெற விருப்பம் இல்லாமல் ரீசார்ஜ் செய்யாமல் விட்டுவிட்டால், எப்பொழுது உங்களது அழைப்புகள் துண்டிக்கப்படும் என்பதை பார்க்கலாம் .
- ரூ.99 - கு ரீசார்ஜ் செய்து விட்டு, அடுத்து வரும் சில மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யாமலே இன்கமிங் மற்றும் அவுட்கோயிங் கால்ஸ் பெற நினைத்தால், குறிப்பிட்ட சில நாட்களுக்கு பின் அழைப்பு துண்டிக்கப்படும் .
- பொதுவாகவே 9௦ நாட்கள் வரை ரீசார்ஜ் செய்யாமல் இருந்தால், தானாகவே ஜியோ சேவை துண்டிக்கப்படும். மேலும் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வில்லை என்றாலும் சேவை துண்டிக்கப் படும்.
- ஜியோ பிரைம் திட்டத்திற்கு ரீசார்ஜ் செய்யாமல், மற்ற சலுகைகளை பயன்படுத்த முடியும். ஆனால் பிரைம் திட்டத்திற்கு வழங்கப்படும் சலுகையை போல், மற்ற திட்டத்திற்கான சலுகையில் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
- மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு, ஜியோ சேவையே வேண்டாமென்றாலும், செபி விதிமுறைகளின் படி, ஜியோ சேவை தானாகவே துண்டிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.