Jio 5G Plan: ஜியோவில் 5ஜி பிளான் அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

By Dinesh TGFirst Published Jan 14, 2023, 2:58 PM IST
Highlights

இந்தியாவில் முதன்முறையாக ஜியோ நிறுவனம் 5ஜி ரீசார்ஜ் பிளானை அறிவித்துள்ளது. இந்த பிளான் எவ்வளவு ரூபாய், யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.

ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் தனது 5ஜி சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது. ஜியோவின் 5ஜி பேண்ட் இருக்கக்கூடிய 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருந்து, 5ஜி அமல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இருந்தால் ஜியோவின் 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தலாம். இதுவரையில் 5ஜிக்கு என தனியாக ரீசார்ஜ் திட்டங்கள் எதுவும் வகுக்கப்படவில்லை. மேலும், 5ஜிக்கு என்று தனியாக சிம் கார்டு வாங்கவும் தேவையில்லை.

ஆனால், 5ஜி சேவையை பெற வேண்டுமெனில், ஜியோ வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 239 ரூபாய்க்காவது ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். அதாவது ரூ.239 மேற்பட்ட பிளான்களில் மட்டுமே அதே பிளான் டேட்டாவில் ஜியோ 5ஜி சேவை வழங்கப்பட்டது. எனவே, 239 ரூபாய்க்கு குறைவாக ரீசார்ஜ் செய்துள்ள வாடிக்கையாளர்களால் ஜியோவின் 5ஜி சேவையை அனுபவிக்க முடியாமல் இருந்தது. 

இந்த நிலையில், ஜியோ வாடிக்கையாளர்கள் 5G சேவைகளை அனுபவிக்கும் வகையில் ரூ.61 டேட்டா ரீசார்ஜ் பிளான் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, My Jio செயலியில் புதிய “5G அப்கிரேடு” என்ற பிரிவைச் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே உள்ள ரூ.61 டேட்டா வவுச்சர் என்ற திட்டம் உள்ளது. அதிக விலையுள்ள ப்ரீபெய்ட் திட்டம் இல்லாதவர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில். இதில் 6ஜிபி டேட்டாவும் உள்ளது.

இந்தியர்கள் தினமும் சுமார் 5 மணி நேரம் ஸ்மார்ட்போனில் மட்டும் செலவிடுகிறார்கள்: ஆய்வில் தகவல்

உங்களின் தற்போதைய ப்ரீபெய்ட் திட்டம் காலாவதியாகும் வரை ரூ.61 பிளான் செயலில் இருக்கும். ரூ.119, ரூ.149, ரூ.179, ரூ.199 அல்லது ரூ.209 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தவர்களுக்கு இந்த 5ஜி டேட்டா திட்டம் வேலை செய்யும். ஆனால், நீங்கள் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபரைப் பெறவில்லை என்றால், இந்த 5ஜி டேட்டா திட்டத்தை வாங்கிய பிறகும் உங்களால் 5ஜியை அனுபவிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.

5ஜி சேவைகளை பெறுவதற்கு நான்கு விஷயங்கள் தேவை. உங்கள் ஸ்மார்ட்போன் 5G ஆக இருக்க வேண்டும், மற்றும் ஜியோவின் 5G அப்டேட் பெற்றிருக்க வேண்டும். ஜியோ வெல்கம் ஆஃபரின் ஒரு பகுதியாக ஜியோ 1ஜிபிபிஎஸ் வேகத்தை வழங்குகிறது, ஆனால் நெட்வொர்க்கை சோதிக்க வேண்டுமெனில் இந்த டேட்டா போதாது என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!