இந்தியாவில் iQOO 11 ஸ்மார்ட்போன் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனின் விலை, சிறப்பம்சங்கள், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதா என்பது குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.
இந்தியாவில் iQOO 11 ஸ்மார்ட்போன் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனின் விலை, சிறப்பம்சங்கள், எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதா என்பது குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம். இந்தியாவில் iQOO நிறுவனம் லேட்டாக வந்தாலும், வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதற்கு முன்பு ஐக்கூ தரப்பில் வெளியான ஸ்மார்ட்போன்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐக்கூ 11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டு, தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: 5ஜி ஸ்மார்ட்போன்கள் வாங்க சரியான நேரம்?
இதில் குவால்காமின் முதன்மை பிராசசர் என்று அழைக்கப்படக் கூடிய ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 2 இருப்பதால், செயல்திறன் மிக்கதாக உள்ளது. குறிப்பாக தற்போது சந்தையில் உள்ள சில முன்னணி ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமைகிறது. iQOO 11 இந்தியாவில் 8GB+256GB மாடல் ரூ.59,999 அறிமுகப்படுத்தப்பட்டது, அதேசமயம் 16GB+256GB விலை ரூ.64,999 என்ற வகையில் அறிமுகமானது.
இருப்பினும் வங்கிச் சலுகைகளுடன், ரூ.51,999 மற்றும் ரூ.56,999க்கு ஐக்கூ 11 ஸ்மார்ட்போனின் இரு மாடல்களை வாங்கலாம். அமேசான் பிரைம் உறுப்பினர்கள் ஜனவரி 12 ஆம் தேதி பிரைம் எர்லி விற்பனையில் ரூ. 1000 உடனடி தள்ளுபடியைப் பெறலாம். பிரைம் அல்லாத பயனர்கள் அமேசான் மற்றும் iQOO ஸ்டோர்களில் ஜனவரி 13 முதல் வாங்கலாம். iQOO 11 இரண்டு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. லெஜண்ட் மற்றும் ஆல்பா வகைகள் ஆகும்.
இதையும் படிங்க: செம்ம ஆஃபர்.. ரூ.14,000 விற்பனையான Smart TV இப்போது வெறும் ரூ.8,000! உடனே முந்துங்கள்!!
iQOO 11: சிறப்பம்சங்கள்
iQOO 11 ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 144Hz ரெப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 Gen 2 பிராசசர், 16GB ரேம் ஆகியவை உள்ளது. இந்த ரேமை 8 ஜிபி வரை விரிவாக்கலாம். ஸ்மார்ட்போன் 256 ஜிபி சேமிப்பகத்துடன் 8 ஜிபி மாடலிலும் வருகிறது.
கேமராவைப் பொறுத்தவரையில், iQOO 11 ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 50 மெகாபிக்சல் சாம்சங் ஜிஎன்5 லென்ஸ் கேமரா, 13 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவை உள்ளன.
முன்பக்கத்தில்செல்ஃபிகளை எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. iQOO 11 ஆனது பிரத்யேக V2 இமேஜிங் சிப்பைக் கொண்டுள்ளது, இது இருட்டில் கூட நன்கு வெளிச்சமாக்கி படத்தைத் தருகிறது. கேமிங் செயல்திறனை மேலும் மேம்படுத்த, iQOO 11 ஆனது டூயல் x-லீனியர் மோட்டாரைக் கொண்டுள்ளது, இது கேமிங் செயல்திறனை மேம்படுத்துகிறது. பேட்டரியைப் பொறுத்தவரை, 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான வசதி, 5000mAh பேட்டரியைக் உள்ளது.