குடியரசு தினத்தை முன்னிட்டு அமேசான் நிறுவனம் சிறப்பு தள்ளுபடி விற்பனையை அறிவித்திருந்தது. இந்த நிலையில், குறிப்பிட்ட 5ஜி தயாரிப்புகளுக்கு எவ்வளவு ரூபாய் தள்ளுபடி என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
Amazon Great Republic Day விற்பனையானது வரும் ஜனவரி 15 ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக ஜனவரி 17 ஆம் தேதி விற்பனையை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்திற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. பிளிப்கார்ட் நிறுவனம் பிக் சேவிங் டேஸ் விற்பனையை தொடங்கும் அதே நேரத்தில், அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனையை நடத்த வாய்ப்புகள் உள்ளன.
Amazon Republic Day விற்பனை தேதி அறிவிப்பு: ஸ்மார்ட்போன்கள், டிவிகள் என பல பொருட்களுக்கு ஆஃபர்!
இப்போது OnePlus Nord 2T 5G வாங்க ஆர்வமுள்ளவர்கள் இன்னும் சில நாட்கள் காத்திருந்தால், அதை Amazon Great Republic Day விற்பனையின் போது நல்ல தள்ளுபடி விலையில் வாங்கலாம். இதேபோல், Samsung Galaxy M13, iQOO Z6 Lite 5G, Realme Narzo 50m மற்றும் Redmi 11 Prime 5G ஆகியவையும் பெரிய தள்ளுபடியைப் பெறும் என்று அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ரூ.10,999 முதல் 5ஜி போன்களை வழங்குவதாக அமேசான் உறுதியளிக்கிறது.
Jio 5G in Tamil Nadu: தமிழகத்தில் ஜியோ 5ஜி விரிவாக்கம்!! உங்க ஏரியா இருக்கானு பாருங்க!!
தற்போது இந்தியாவில் உள்ள சில பட்ஜெட் 5G போன்கள் Samsung Galaxy M13, Poco M4, iQOO Z6 Lite ஆகும். எனவே, இவற்றின் விலை நல்ல குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் இயர்பட்களுக்கான ஆஃபர்களும் உள்ளன. இவற்றின் விலைகள் Amazon தரப்பில் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்த அளவில் விற்பனைக்கு வருமா என்பது விரைவில் தெரியவரும்.
இந்தியர்கள் தினமும் சுமார் 5 மணி நேரம் ஸ்மார்ட்போனில் மட்டும் செலவிடுகிறார்கள்: ஆய்வில் தகவல்
ஒப்போ போன்களின் விலையை வெளியிட்டுள்ளது. Oppo F21s Pro 5G ஆனது 23,499 ரூபாய்க்கும், Oppo F21s Pro 19,999 ரூபாய்க்கும் கிடைக்கும். Oppo A74 விலையானது ரூ.14,240 ஆக குறையும். இவை அனைத்தும் வங்கி சலுகைகள் மற்றும் சில தள்ளுபடியின் அடிப்படையில் இருக்கும். எஸ்பிஐ வங்கி கார்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.