ஏர்டெல் நிறுவனம் நெட்பிளிக்ஸ் சந்தா ஆஃபர் அறிவித்துள்ளது. இது என்ன பிளான், யாருக்கெல்லாம் இந்த ஆஃபர் பொருந்தும் என்பது குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.
கடந்த ஆண்டு ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு பல்வேறு சலுகைகளை அறிவித்தன. குறிப்பாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் என பலவகை சந்தாக்களை பல தரப்பட்ட ரீசார்ஜ் பிளான்களில் வழங்கின. ஆனால், அதன்பிறகு சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக ரீசார்ஜ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன, சலுகைகள் குறைக்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு நெட்பிளிக்ஸ் பிரீமியம் சந்தாவுக்கான ஆஃபர் அறிவித்துள்ளது. இது இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் Netflix சந்தாவை இலவசமாக வழங்குகிறது அதன்படி, மாதத்திற்கு ரூ.649 மதிப்புள்ள நெட்ஃபிளிக்ஸ் பிரீமியம் திட்டத்தை வெறும் ரூ.150க்கு ஏர்டெல் போஸ்பெய்டு திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள் பெறலாம். இது கிட்டத்தட்ட ரூ.500 தள்ளுபடி போன்றது.
ஏர்டெல் ரூ 1499 போஸ்ட்பெய்ட் திட்டம்
ஏர்டெல் வழங்கும் ரூ.1499 போஸ்ட்பெய்ட் திட்டமானது போஸ்ட்பெய்ட் பிரிவிலேயே மிகவும் விலையுயர்ந்த திட்டமாகும். இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 200ஜிபி மாதாந்திர டேட்டா, அன்லிமிடேட் வாய்ஸ் கால் வழங்குகிறது. இந்த பிளானின்படி, குடும்ப உறுப்பினர்களுக்கு நான்கு இலவச ஆட்-ஆன் சேவைகள் வழங்கப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு ஆட்-ஆன் இணைப்புக்கும் 30ஜிபி டேட்டா என 200ஜிபி வரை கிடைக்கும். இந்த திட்டத்தில் பயனர்கள் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் பெறுகிறார்கள்.
Jio 5G in Tamil Nadu: தமிழகத்தில் ஜியோ 5ஜி விரிவாக்கம்!! உங்க ஏரியா இருக்கானு பாருங்க!!
கூடுதல் பலன்களைப் பொறுத்தவரை, பயனர்கள் Netflix Standard மாதாந்திர சந்தாவையும், ஆறு மாதங்களுக்கு Amazon Prime சந்தாவும், ஒரு வருடத்திற்கு Disne+ Hotstarஐயும் பெறுகிறார்கள். அத்துடன், மாதத்திற்கு ரூ.150 கூடுதலாக செலுத்தி Netflix பிரீமியம் பெறலாம். வழக்கமாக இந்த நெட்பிளிக்ஸ் கட்டணம் 649 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ 1199 போஸ்ட்பெய்ட் திட்டம்
நீங்கள் ரூ.1199 போஸ்ட்பெய்டு திட்டத்தில் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால், அன்லிமிடேட் வாய்ஸ் கால்கள், 150ஜிபி மாதாந்திர டேட்டா, 3 இலவச ஆட்-ஆன் சேவைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு கூடுதல் இணைப்புகளுக்கும், 30ஜிபி டேட்டாவை என 200ஜிபி வரை பெறலாம். இந்த இணைப்பில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கூடுதலாக Netflix Basic, Amazon Prime மெம்பர்ஷிப் ஆறு மாதங்களுக்கும், Disney+ Hotstar மொபைல் சந்தா 1 வருடத்திற்கும், Wynk Premium மற்றும் ஸ்மார்ட்போன் பாதுகாப்பு ஆகியவையும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.300 செலுத்தி Netflix ஸ்டாண்டர்டு திட்டத்துக்கும், மாதத்திற்கு ரூ.450 செலுத்தி Netflix பிரீமியம் திட்டத்துக்கும் பயன்பெறலாம்.