தமிழகத்தில் சென்னையில் மட்டும் வழங்கப்பட்டு வந்த ஜியோ 5ஜி சேவை தற்போது, பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் 5ஜி கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.
ஜியோ நிறுவனம் 5ஜி சேவைகளை டெல்லி, மும்பை, வாரணாசி மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது, அதே நேரத்தில் அக்டோபர் 22 ஆம் தேதி நாத்வாரா மற்றும் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், தமிழகத்தில் விரைவில் பல இடங்களில் ஜியோ 5ஜி விரிவுபடுத்தப்படும் என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் சேலம், மதுரை, திருச்சி, கோவை, ஒசூர், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் ஜியோ 5ஜி சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த அறிமுகத்தை தமிழக தொழில்நுட்ப துறை மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். இது குறித்து வெளிவந்த தகவலின்படி, தமிழகத்தில் 5ஜி சேவையை விரிவுபடுத்துவதற்காக சுமார் 40 ஆயிரத்து 446 கோடி ரூபாய் ஜியோ நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அடுத்த 6 மாதங்களுக்குள் 6 முக்கிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் வகையில் விரிவுபடுத்த ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, கடந்த நவம்பர் 10 அன்று பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தியது, பின்னர், குருகிராம், நொய்டா, காஜியாபாத் மற்றும் ஃபரிதாபாத் ஆகிய நகரங்களில் அடுத்த நாள் விரிவுபடுத்தியது.
5G நெட்வொர்க் மிகவும் சிறந்தது மற்றும் பயனர்களுக்கு 10 மடங்கு வேகமான இணைய வேகத்தை வழங்குகிறது. இருப்பினும், 5ஜி நெட்வொர்க்கை பயன்படுத்தியவர்கள் மொபைல் டேட்டா உடனடியாக தீர்ந்துவிடுவதாக கூறுகின்றனர்.உங்கள் ஸ்மார்ட்போனில் 5G பெற்று, அதைச் செயல்படுத்தினால், உங்கள் டேட்டா சற்றென்று முடிந்துவிடும். சிலர் நெட்வொர்க் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
நீங்கள் 5G ஐப் பயன்படுத்த திட்டமிட்டால், உங்கள் ஸ்மார்ட்போனில் டேட்டா இருக்காது. வெளியே இருக்கும்போது 5ஜி பயன்படுத்த வேண்டாம். ஹோட்டல்களில் பணம் செலுத்துவது முதல், டிக்கெட் முன்பதிவு செய்வது வரை, மொபைல் டேட்டா என்பது மிகவும் முக்கியமானது. எனவே, 5ஜி பயன்படுத்தினால், மொபைல் டேட்டா இல்லாமல் எங்காவது நடுவில் சிக்கிக் கொள்ள நேரிடும்.
ஜியோ வெல்கம் ஆஃபரின் ஒரு பகுதியாக ஜியோ 1ஜிபிபிஎஸ் வேகத்தை வழங்குகிறது, ஆனால் அதற்கென கூடுதல் டேட்டாவை வழங்கப்படவில்லை. நீங்கள் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா பிளானை தான் வைத்துள்ளீர்கள் எனில், 5ஜி ஆன் செய்தால், அந்த 2ஜிபி டேட்டா உடனடியாக காலியாகிவிடும். எனவே, இப்போதைக்கு 5ஜிக்கு மாறுவது உகந்ததல்ல என்பது அனுபவதித்தவர்களின் கருத்தாக உள்ளது.