அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள், ஒன்பிளஸ், ரெட்மி, போகோ, சாம்சங் இன்னும் பல பிராண்டுகளுக்கு நல்ல ஆஃபர்கள் வழங்கப்பட உள்ளன.
அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள், ஒன்பிளஸ், ரெட்மி, போகோ, சாம்சங் இன்னும் பல பிராண்டுகளுக்கு நல்ல ஆஃபர்கள் வழங்கப்பட உள்ளன. கடந்த மாதங்களில் விஜய தசமி, தீபாவளி ஆஃபர், புத்தாண்டு ஆஃபர்கள் இருந்தன. அதன் பிறகு தற்போது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஆஃபர்கள் வழங்க திட்டமிட்டுள்ளன. அந்த வகையில், அமேசான் கிரேட் குடியரசு தின விற்பனை தேதியை அறிவித்துள்ளது. இந்த ஆஃபரானது பிரைம் பயனர்களுக்கு ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கும், மற்ற அனைவருக்கும் ஜனவரி 17 ஆம் தேதி கிடைக்கும்.
இதையும் படிங்க: Meta நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நீக்கம்! அடுத்த கட்ட நடவடிக்கையும் தொடக்கம்!!
குடியரசு தின தள்ளுபடி விற்பனை ஜனவரி 20 வரை தொடர்ந்து இருக்கும். இதில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) உடன் அமேசான் நிறுவனம் கை கோர்த்துள்ளது. அதன்படி, எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடிகளை வழங்கப்படுகிறது. SBI கார்டு மூலம் செய்யப்படும் EMI பரிவர்த்தனைகளுக்கும் இந்த சலுகை பொருந்தும். இந்த முறை அமேசான் சரியான ஆஃபர்கள் வெளியிடவில்லை என்றாலும், ஐபோன் 13 மற்றும் ஐபோன் 14 உள்ளிட்ட ஆப்பிள் ஐபோன்களுக்கு நல்ல ஆஃபர் கிடைக்கும் என்று விளம்பரத்தில் தெரிகிறது. இது தொடர்பான தள்ளுபடி விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. விற்பனையின் போது ஸ்மார்ட்போன்கள் 40 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்படும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ஷாவ்மி 13 லைட் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்கள் வெளிவந்தன!
ஒன்பிளஸ் 10டி, சாம்சங் கேலக்ஸி எஸ்20 எஃப்இ, iQOO நியோ 6, ரெட்மி நோட் 11 மற்றும் இன்னும் சில மாடல்களுக்கு நல்ல விலை குறைப்பு செய்யப்படும். ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, மடிக்கணினிகள், ஹெட்ஃபோன்கள் மற்றும் பல எலக்ட்ரானிக் பொருட்களுக்கும் அமேசான் நிறுவனம் தள்ளுபடியை வழங்குகிறது. லேப்டாப்களில் 40 சதவீதம் வரை தள்ளுபடியும், ஸ்மார்ட்வாட்ச்கள் அல்லது ஃபிட்னஸ் பேண்ட் வகைக்கு 75 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. கூடுதலாக, ஹெட்ஃபோன்கள் மற்றும் நெக் பேண்டுகளுக்கு 75 சதவிகிதம் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்பீக்கர்களின் விலை 65 சதவிகிதம் குறையும். தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், வாஷிங் மெஷின்கள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் டிஷ் வாஷ் மிஷின் உள்ளிட்ட பெரிய சாதனங்களுக்கும் தள்ளுபடியை வழங்கப்படுகிறது.