சீனாவில் கடந்த மாதம் Xiaomi 13 மற்றும் 13 Pro ஸ்மார்ட்போன்களை ஷாவ்மி நிறுவனம் அறிமுகம் செய்தது.
சீனாவில் கடந்த மாதம் Xiaomi 13 மற்றும் 13 Pro ஸ்மார்ட்போன்களை ஷாவ்மி நிறுவனம் அறிமுகம் செய்தது. MWC 2023 நிகழ்வுக்கு முன்பாகவே இந்த ஸ்மார்ட்போனை கொண்டு வர திட்டமிட்டு, அதன்படி அறிமுகம் செய்தது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்த நிலையில், அதே ஷாவ்மி 13 சீரிஸ் வரிசையில், தற்போது புதிதாக ஷாவ்மி 13 லைட் என்ற மாடல் வரவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இதையும் படிங்க: விண்டோஸ் 7 வைத்திருப்பவர்களுக்கு கெட்ட செய்தி!
undefined
இது தொடர்பாக கிடைத்த தகவலின்படி, ஷாவ்மி 13 லைட் என்று கருதப்படக்கூடிய ஸ்மார்ட்போனானது Google Play கன்சோல் பட்டியலில் தோன்றியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் குறியீட்டுப் பெயர் Ziyi ஆகும், இது சீனாவின் பிரத்தியேக Xiaomi Civi 2 உடன் கிட்டத்தட்ட ஒத்துப்போகிறது. Xiaomi 13 Lite ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சங்கள் Google Play Console பட்டியல் மூலம் தெரியவந்துள்ளன.
அதன்படி, ஷாவ்மி 13 லைட் ஸ்மார்ட்போனில் வளைந்த விளிம்புகளுடைய தோற்றத்தில் இருப்பதாக தெரிகிறது. போனின் மேற்பகுதியில் மையத்தில் பஞ்ச்-ஹோல் கட்அவுட், பின்புறத்தில் மூன்று சென்சார்கள் கொண்ட கேமரா இருப்பதாக தெரிகிறது. 440 PPI பிக்சல் டென்சிட்டி 1,080 x 2,400-பிக்சல் டிஸ்ப்ளே எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Meta நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் நீக்கம்! அடுத்த கட்ட நடவடிக்கையும் தொடக்கம்!!
கூகுள் கன்சோல் பட்டியலின்படி, Xiaomi 13 லைட் ஸ்மார்ட்போனில் QTI SM7450 பிராசசர், அதாவது Qualcomm Snapdragon 7 Gen 1 பிராசசருடன் ஒத்துபோகும் வகையில் அமைந்துள்ளது. இதில் ஒருங்கிணைந்த அட்ரினோ 644 GPU இருக்கலாம். 8 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 12 OS இயங்குதளத்துடன் வெளிவரும். இது தொடர்பான முழுமையான விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.