விண்டோஸ் 7 வைத்திருப்பவர்களுக்கு கெட்ட செய்தி!

By SG Balan  |  First Published Jan 11, 2023, 3:33 PM IST

தற்போது விண்டோஸ் 11 இயங்குதளமே பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில், இன்னும் பல பயனர்கள் விண்டோஸ் 7 தளத்தை வைத்திருக்கின்றனர். தற்போது விண்டோஸ் 7 தளத்தில் பல செயலிழப்புகள் நடைபெற உள்ளன. இது குறித்த முழுமையான விவரங்களை இங்குக் காணலாம்.


கடந்த 2009 ஆம் ஆண்டு விண்டோஸ் 7 அறிமுகமான போது, ​​அது பெரும் புகழ் பெற்றது. அனைத்து புதிய அம்சங்களும், அப்டேட்டுகளும் பயனர்களை உற்சாகப்படுத்தியது. அதற்கு பின்னர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2013 ஆம் ஆண்டில், விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1 கிடைத்தது. இருப்பினும், இந்த விண்டோஸ் 8 மற்றும் 8.1 ஆகியவை எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. பல பயனர்கள் விண்டோஸ் 7 தளத்தையே விரும்பினர.

இப்போது, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆகவிட்டது. மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 மற்றும் 8.1 இரண்டையும் நிறுத்திவிட்டது. அதாவது, Windows 7 க்கான ஆதரவு 2020 ஆண்டில் முடிவடைந்தது. இதே போல் Windows 8.1 க்கான ஆதரவு 2022 ஆண்டின் பிற்பகுதியில் முடிவடைந்தது. இந்த ஆண்டு, இந்த இரண்டு தளங்களும் முற்றிலுமாக முடித்துக் கொள்ளப்படுகின்றன. இதனால், இனி விண்டோஸ் 7, 8.1 இயங்குதளங்களில் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் வைரஸ்கள் தாக்கும் ஆபத்து அதிகம் உள்ளது.

Tap to resize

Latest Videos

விண்டோஸ் 7 அல்லது 8.1 பயனர்கள் என்ன செய்ய வேண்டும்?

உங்களில் இன்னும் இரண்டு இயங்குதளங்களில் ஒன்றைப் பயன்படுத்துபவர்களாக இருந்தால், பீதி அடையத் தேவையில்லை. சில எளிய படிகளில் உங்கள் கணினியை Windows 11 க்கு மேம்படுத்தலாம். உங்கள் கணினியைப் பயன்படுத்துவதைத் தொடரலாம். ஒருவேளை நீங்கள் Windows 10 க்கு கூட மாற நினைக்கலாம், ஆனால், விண்டோஸ் 10 காலம் 2025 ஆண்டில் முடிவடைகிறது. எனவே, நீங்கள் ஒரு புதிய PC அல்லது லேப்டாப்பை வாங்க திட்டமிட்டிருந்தால், இப்போது சரியான நேரமாக இருக்கும்.

 

விண்டோஸ் 11 க்கு மேம்படுத்தலாமா:

குறிப்பிட்ட தேவைகள் உள்ள சாதனங்களில் மட்டுமே Windows 11 இயங்க முடியும். உங்கள் சாதனத்தில் விண்டோஸ் 11 ஏற்றுக்கொள்ளுமா இல்லையா என்பதை முதலில் சரிபார்க்க வேண்டும். இதற்கு நீங்கள் Microsoft Support பக்கத்திற்குச் செல்லலாம். மைக்ரோசாப்டின் இணையதளத்திற்குச் சென்று Windows 11 உடன் உங்கள் கணினியின் இணக்கத்தன்மையை சரிபார்க்கலாம். உங்கள் சிஸ்டம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தால், விண்டோஸ் 11 க்கு மேம்படுத்தலாம்.

click me!