இந்தியாவில் Redmi Note 12C ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இது பட்ஜெட் விலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஷாவ்மி நிறுவனத்தின் Redmi Note 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமாகியன. இதில் வெவ்வேறு மாடல்களும், அதற்கு ஏற்ப விலையும் இருந்தன. இந்த நிலையில், பட்ஜெட் பிரிவு வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிதாக ரெட்மி 12 சி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக இப்போது தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் கிடைக்கிறது, இப்போது இந்த ஆண்டு பிப்ரவரியில் இந்தியாவிற்கு வரும் என்று கூறப்படுகிறது.
பார்சிலோனாவில் MWC 2023 நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு இந்தியாவில் Redmi Note 12C ஐ அறிவிக்க ஷாவ்மி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக 91Mobiles தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நிகழ்வு பிப்ரவரி 27 அன்று தொடங்கி மார்ச் 2 வரை தொடரும். எனவே, இந்த ஸ்மார்ட்போனும் அதை ஒட்டி அறிமுகமாகலாம். ஏற்கெனவே சீனாவில் இது அறிமுகமானதால், அதே சிறப்பம்சங்கள் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் ஃபோன் உலகளாவிய சந்தையில் கிடைக்கும், ஆனால் வேறு பிராண்ட் பெயரில் கிடைக்கும்.
Redmi 12C ஸ்மார்ட்போனை பொறுத்தவரையில் Poco C55 என்ற பெயரில் உலகளவில் வெளியிடப்படும் என்று கேக்பர் ஸ்க்ரிப்பெக் என்ற டெக் லீக்கர் தனது ட்விட்டரில் கூறியுள்ளார். இந்த Poco போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் Redmi மற்றும் Poco போன்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கின்றன, ஆனால் வேறுபட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளன.
புதுசா லேப்டாப் வாங்கணுமா! இத பாருங்க... இந்தியாவில் டாப் 5 லேப்டாப்கள்!
இதுவரை கிடைத்த தகவலின்படி, Redmi 12C சீன மாடலில் HD+ , 6.71 இன்ச் டிஸ்ப்ளே, 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி, 10W சாரஜ்ர் ஆகியவை உள்ளன. மீடியா டெக் ஹீலியோ G85 பிராசசர், இருப்பதால் ஒரளவு நல்ல செயல்திறன் பெற்றுள்ளது. கேமராவைப் பொறுத்தவரையில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் டெப்த் சென்சார் என டூயல் கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ காலுக்காக 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
இது ரெட்மியின் ஆரம்ப நிலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், Redmi 12C அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை. இந்த மொபைலை இந்தியாவிற்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தால், அது பற்றிய விவரங்களை வரும் வாரங்களில் வெளிவரலாம். மிகமுக்கியமாக இது 5G ஃபோனாக இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம், ஏனெனில் இதில் 4G சிப் உள்ளது. இது வழக்கமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
Realme 10 இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!