ஜியோ நிறுவனத்தின் புத்தம் புதிய 4ஜி ஜியோ புக் (Jio Book) லேப்டாப் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.
கடந்த மாதம் ரிலையன்ஸ் நிறுவனம் 4ஜி சிம், ஆண்டாய்டு தளத்துடன் கூடிய மலிவு விலை லேப்டாப்பை அறிமுகம் செய்தது. இந்த லேப்டாப் தற்போது ரிலையன்ஸ் ஆன்லைன், ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்மார்ட்போனில் உள்ள அம்சங்களே இதில் இடம் பெற்று உள்ளது.
ஜியோ ஓஎஸ், மொபைலுக்கான ஸ்னாப் ட்ரேகன் 665 சிப்பை பயன்படுத்தி இது வடிவமைக்கப்பட்டு உள்ளது. 2018 ஆண்டு வெளியான சிப்பினை தற்போது லேப்டாப்பில் பொருத்தி உள்ளதால், லேப்டாப் பயன்பாடுகள் பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது.
இது 11.6-இன்ச் HD பேனல், 64-பிட் ஆக்டா-கோர் ப்ராசஸரைக் கொண்டுள்ளது. இந்த லேப்டாப் ஜியோ OS ஆல் இயக்கப்படுகிறது. இதன் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே இன்ஸ்டால் செய்த மூன்றாம் தரப்பு ஆப்களை ஜியோ ஸ்டோர் உதவியுடன் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
ஜியோ புக் லேப்டாப்பில் உள்ள 55.1 முதல் 60Ah பேட்டரி, ஒருமுறை சார்ஜ் செய்தால் 8 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குவதாக விளம்பரப்படுத்தப்படுட்டு உள்ளது.
இதில் 3.5mm ஆடியோ ஜாக், ப்ளூடூத் v5.0, 1 HDMI மினி போர்ட், Wi-Fi மற்றும் 4G LTE (ஜியோ நெட்வொர்க்) உள்ளது. இது வீடியோ அழைப்புகளுக்கு 2MP வெப் கேமரா மற்றும் ஆடியோவிற்கு 2 x 1.0W ஸ்டீரியோ ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது.
Apple iPad Pro 2022 இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
வாடிக்கையாளர்கள் தங்கள் ஐசிசிஐடி (சிம் எண்) உடன் அருகிலுள்ள ஜியோ ஸ்டோருக்குச் சென்று, தங்கள் கேஒய்சியை முடித்து, தங்களின் சிம் கார்டுகளைச் செயல்படுத்த, தங்களுக்கு விருப்பமான டேட்டா திட்டத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஜியோ லேப்டாப்பை வாங்க விரும்புபவர்கள் Axis, Kotak, ICICI, HDFC, AU, IndusInd, DBS, Yes Bank மற்றும் பிற முக்கிய வங்கி கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம்.