Apple iPad Pro 2022 இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

By Dinesh TG  |  First Published Oct 19, 2022, 10:52 PM IST

Apple iPad pro launched in India: ஆப்பிள் நிறுவனத்தின் iPad pro (2022) இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை இங்குக் காணலாம்.


ஆப்பிள் நிறுவனம் இந்தாண்டு இரண்டு புதிய iPad மாடல்களை அறிமுகம் செய்வதாக இருந்தது. அதன்படி, தற்போது iPad Pro (2022) மாடல்கள் இரண்டு திரை அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில்  ஆப்பிளின் சக்திவாய்ந்த M2 சிப் பிராசசர் வழங்கப்பட்டுள்ளன. அவை 5G நெட்வொர்க் ஆப்ஷன் மற்றும் ஆப்பிள் பென்சிலில் ஹோவர் அம்சமும் உள்ளன.

iPad Pro 2022 விலை:

Latest Videos

undefined

Wi-Fi-மட்டும் மாடலுடன், 11-இன்ச் திரை அளவுடன் கூடிய iPad Pro விலையானது ரூ.81,900 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Wi-Fi + செல்லுலார் மாடலின் விலை ரூ.96,900 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் WiFi மட்டும் மாடலுடன் 12.9-இன்ச் iPad Pro விலையானது ரூ.1,12,900 என்று நிர்ணயிக்கப்ப்டடுள்ளது. Wi-Fi + செல்லுலார் மாடலுக்கு ரூ.1,27,900 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய iPad Pro மாடல்களுக்கான முன்பதிவும் தொடங்கியுள்ளது. அக்டோபர் 26 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. 

Apple iPad Pro (2022) சிறப்பம்சங்கள்:

ஐபேட் ப்ரோவில் ஆப்பிளின் பிரத்யேக M2 சிப் கொடுக்கப்பட்டுள்ளது. இது M1 SoC சிப்பை விட 15 சதவீதம் வேகமானது ஆகும். மேலும், 35 சதவீதம் அதிக கிராபிக்ஸ் செயல்திறனை வழங்குகிறது. 16GB வரை ஒருங்கிணைந்த மெமரி, 2TB வரைக்குமான கூடுதல் ஸ்டோரேஜ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Apple நிறுவனத்தை அசிங்கப்படுத்திய WhatsApp.. அப்படி என்ன ஆனது?

டிஸ்ப்ளே பொறுத்தவரையில், iPad Pro (2022) ஆனது இரண்டு விதமாக வருகிறது. அவை: 1688 x 2388-பிக்சல் கொண்ட 11-இன்ச் லிக்விட் ரெடினா டிஸ்ப்ளே,  மற்றும் 2048 x 2732-பிக்சல் கொண்ட 12.9-இன்ச் லிக்விட் ரெடினா XDR மினி-எல்இடி டிஸ்ப்ளே ஆகும். 

இந்த இரண்டு மாடல்களும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் Apple இன் ProMotion டிஸ்ப்ளேவைப் பயன்படுத்துகின்றன. 12.9-இன்ச் மாடலில் 1,600 நிட்கள் வரையிலான திரை பிரகாசம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

click me!