Realme 10 இந்தியாவில் அறிமுகம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!

By Dinesh TG  |  First Published Jan 9, 2023, 9:53 PM IST

ரியல்மி நிறுவனத்தின் புத்தம் புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.


ஷாவ்மி நிறுவனம் அண்மையில் ரெட்மி நோட் 12 5G சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், ரெட்மி போனுக்குப் போட்டியாக ரியல்மி 10 4G அறிமுகமாகியுள்ளது. இதில் மீடியா டெக் G99 பிராசசர்,  33W சார்ஜிங் வசதி, அதற்கு ஏற்ப 5,000mAh பேட்டரி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. 

இந்தியாவில் Realme 10 4G விலை:

Tap to resize

Latest Videos

undefined

இந்தியாவில் Realme 10 4G ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்டுகளில் கிடைக்கிறது. 4GB ரேம், 64GB மெமரி மாடலின் ரூ.13,999 எனவும்,  8GB ரேம்,128GB மெமரியின் விலை ரூ.16,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதோடு சில குறிப்பிட்ட வங்கி கார்டுகளுக்கு ஆஃபர்களும் உள்ளன. எனவே, ஆஃபர்களைப் பயன்படுத்தும் பட்சத்தில், ரூ.12,999 மற்றும் ரூ.15,999 என்ற வகையில் ஸ்மார்ட்போனை  வாங்கலாம். Flipkart மற்றும் அதிகாரப்பூர்வ Realme தளங்களில் ஜனவரி 15 (நள்ளிரவு) முதல் விற்பனைக்கு வருகிறது.

Realme 10 4G சிறப்பம்சங்கள்:

ரியல்மி 10 4G ஆனது ரியல்மி 10 Pro போல தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளாஷ் ஒயிட் மற்றும் ரஷ் பிளாக் என இரண்டு வண்ணங்களில் ஸ்மார்ட்போன் வருகிறது. ஸ்மார்ட்போனின் அடிப்பகுதியில் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் சார்ஜ் செய்வதற்கான டைப்-சி போர்ட் ஆகியவை உள்ளன. பக்கவாட்டில் வால்யூம் ராக்கர்ஸ் மற்றும் சிம் கார்டு ஸ்லாட் உள்ளன.

அமேசானில் iQOO 9 SE ஆஃபர்!, இது Redmi Note 12 Pro Plus விட சிறந்ததா?

Realme 10 4G ஸ்மார்ட்போனானது 90Hz அமோலெட் டிஸ்ப்ளே,  360Hz டச் ரெஸ்பான்ஸ் ரேட், FHD+ ரெசல்யூஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. மீடியாடெக் G99 பிராசசர், 8GB வரை LPDDR4X ரேம் மற்றும் 128GB UFS 2.2 மெமரி, UFS 2.2 eMMC ஆகியன உள்ளன. 

கேமராவைப் பொறுத்தவரையில், அல்ட்ரா-வைட் கேமரா இல்லை என்றாலும், பின்புறத்தில், Realme இரண்டு கேமரா சென்சார்களை வழங்கியுள்ளது. Realme 10 4G இல் உள்ள இரட்டை கேமரா அமைப்பில் 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா சென்சார், 2 மெகாபிக்சல் கேமரா உள்ளன. முன்பக்கத்தில் செல்பிக்காக  16-மெகாபிக்சல் கேமரா உள்ளது.  
 

click me!