மற்ற சமூக வலைதளங்களைப் போல் டுவிட்டரிலும் ஒரே பதிவில் நிறைய எழுத்துக்கள் எழுதும் அம்சம் கொண்டு வருவதற்கு எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
தற்போது, ட்விட்டர் தளத்தில் உள்ள ட்வீட்களை இரண்டு வெவ்வேறு வடிவங்களில் பார்க்க முடியும். ட்விட்டர் முகப்புப் பக்கத்தின் மேல் வலதுபுறத்தில் உள்ள நட்சத்திர பட்டனை பயனர்கள் கிளிக் செய்தால், "உங்களுக்காக" என்ற ஆப்ஷனும், "சமீபத்தியவை" என்ற ஆப்ஷனும் காணலாம். அவற்றில் "உங்களுக்காக" ஆப்ஷனைப் பொறுத்தவரையில், "பரிந்துரைக்கப்பட்ட ட்வீட்கள்" காட்டப்டுகின்றன. இதே போல், "சமீபத்தியவை" ஆப்ஷனில் நீங்கள் பின்தொடர்பவர்கள் பதிவிடும் புதிய ட்வீட்களைக் காணலாம்.
இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில் ஸ்வைப் ஆப்ஷன் கொண்டு வரப்பட்டது. சாதரணமாக ஸ்கிரீனை இடது புறம், அல்லது வலது புறம் ஸ்வைப் செய்தாலே மேற்கண்ட இரண்டு ஆப்ஷன்களை மாறி மாறி காட்டும். இதில் பல்வேறு கணக்குகளிலிருந்து ட்வீட்கள் உள்ளன. ட்விட்டர் பட்டியல் பயனர்கள் பின்தொடராத கணக்குகளைப் பின்தொடர உதவுகிறது. பல கணக்குகளை சரியாகப் பின்தொடராமல் பயனர்கள் தங்கள் ஆர்வங்களின் ட்வீட்களைப் பின்தொடர இது உதவும்.
WhatsApp Update: வருகிறது புதிதாக Kept அம்சம்.. என்ன இது?
இதே போல் தற்போது வரவிருக்கும் மிகவும் சுவாரஸ்யமான அம்சம் ‘நீண்ட வடிவ ட்வீட்’ ஆகும் . முதலில், ட்விட்டர் பயனர்கள் 140 எழுத்துக்களில் டைப் செய்ய முடிந்தது அதன்பிறகு கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த எழுத்து வரம்பை 280 ஆக அதிகரிக்கப்பட்டது. டுவிட்டரில் பயனர்களின் அனுபவத்தை மேலும் செம்மைப்படுத்த ட்விட்டர் அதன் UI தளத்தில் (பயனர் இடைமுகம்) புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதன்படி, பிப்ரவரி தொடக்கத்தில் நீண்ட வடிவ ட்வீட்கள் வெளிவரும்.
இந்த அப்டேட் அப்போது அமலுக்கு வரும் என்று தெரியவில்லை. மேலும், எவ்வளவு எழுத்துக்கள் வரையில் எழுதலாம் என்பது குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. UI மாற்றத்தைத் தவிர, ட்விட்டர் புக்மார்க் அம்சமும் கொண்டு வரப்படுகிறது. இதை எலான் மஸ்க் "டிஃபாக்டோ சைலண்ட் லைக்" என்று குறிப்பிடுகிறார். அதாவது, பெயர் குறிப்பிடுவது போல, புக்மார்க் ஆப்ஷானனது பயனர்கள் ஒரு ட்வீட்டை புக்மார்க் செய்ய அனுமதிக்கிறது, அதை அவர்கள் தனியாக ஒரு பகுதியில் பார்க்கலாம், இது ஏற்கனவே Android , iOS வெப் தளத்தில் பயன்பாட்டில் உள்ளது.
புதுசா லேப்டாப் வாங்கணுமா! இத பாருங்க... இந்தியாவில் டாப் 5 லேப்டாப்கள்!